Oscar Award : "விருது வென்றால் 4 குழந்தைகள்...மனைவியுடன் டீல் பேசிய நடிகர்..ஓக்கே ஆனதா ?
Oscar Awards 2025 Winners List : ஆஸ்கர் விருது வென்றால் தனக்கு 4 குழந்தைகள் பெற்றுத் தருவதாக தனது மனைவி தெரிவித்ததாக நடிகர் தெரிவித்தார்

2025 ஆஸ்கர் விருதுகள்
திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர். கடந்த 96 ஆண்டுகளாக திரைக்கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது அகாடமி ஆஃப் மோஷன் பிக்ச்சர்ஸ் .அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குகிறார். டோஜா கேட் , அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் நிகழ்ச்சியில் இசையரங்கேற்றுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கிய பிரிவுகளான சிறந்த நடிகர் , நடிகையர் , இயக்குநர் , சிறந்த படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
சிறந்த துணை நடிகர்
முதல் விருதாக சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. yura borisov , Kieren Culkin , Edward Norton , Guy Pearce Jeremy Strong உள்ளிட்டவர்கள் பரிந்துரை பட்டியலில் இருந்தார்கள். சிறந்த துணை நடிகருக்கான விருதை anora படத்திற்காக Kieren Culkin வென்றார். விருது பெற்ற கையோடு மேடையில் பேசிய அவர் தான் இந்த விருதை வென்றால் தனது மனைவி தனக்கு 4 குழந்தைகள் பெற்றுத் தருவதாக சொன்னதாக கூறி மகிழ்ச்சி தெரிவித்தார்
A Real Pain
கடந்த ஆண்டு வெளியாகிய சிறந்த படங்களில் ஒன்று A Real Pain. சகோதரர்களான டேவிட் மற்றும் பெஞ்சி இருவரும் தங்கள் பாட்டியால் வளர்கப்படுகிறார்கள். யூதர்களுக்கு எதிரான கடும் ஹிட்லரின் கொடுமையான சித்திரவதைகளை அனுபவித்து தப்பி வந்தவர் இவர்களின் பாட்டி. தங்கள் பாட்டியின் இறப்புக்கு பின் தங்களது பாட்டியின் சொந்த வீட்டை தேடி இருவரும் செல்கிறார். பாட்டிக்கு ரொம்ப நெருக்கமான பெஞ்சி ஒரு பொறுப்புகள் இல்லாத சுதந்திரமான மனிதன். அதே நேரத்தில் பொறுப்புள்ளவன் டேவிட். செல்லும் இடத்தில் எல்லாம் தனது தனது வித்தியாசமான செயல்களால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியவன் பெஞ்சி. இதைப் பார்த்து டேவிட் சில நேரங்களில் பொறாமையும் படுகிறான். ஆனால் வெளியில் எந்த வித கவலையும் இல்லாமல் இருக்கும் பெஞ்சி தன்னை வழி நடத்த யாரும் இல்லாமல் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப் படுகிறான். இந்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார்





















