மேலும் அறிய

CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?

CUET-UG 2025 Schedule: மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதற்குமான மத்திய  பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வை (CUET-UG) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் (CUET-UG 2025) கான பொது நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எப்போது தேர்வு நடைபெறும், எப்படி விண்ணப்பிப்பது, கட்டணம் எவ்வளவு என்பது குறித்து பார்ப்போம்.

தேர்வு தேதி:

2025 - 2026 ஆம் ஆண்டுக்கான க்யூட் (CUET-UG 2025) தேர்வு வருகின்ற 08 மே 2025 முதல் 01 ஜூன் 2025 வரை நடைபெறும் என தற்காலிகமாக  தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை 01 மார்ச் முதல் 22 மார்ச் 2025 வரை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.

கணினி அடிப்படையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது.

ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் 

3 பாடங்கள் வரை விண்ணப்பிக்க கட்டணம்: பொது (General  -UR)- ₹1000, ஓபிசி-என்சிஎல் (OBC-NCL)/இடபிள்யூஎஸ் (EWS) - ₹900, எஸ்சி (SC) /எஸ்டி (ST) / மூன்றாம் பாலினம் (Third gender) - ₹800

3 பாடங்களுக்கு மேல் கூடுதலாக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பாடங்களுக்கும் கூடுதல் கட்டணம் : பொது (General  -UR)- ₹400, ஓபிசி-என்சிஎல் (OBC-NCL)/இடபிள்யூஎஸ் (EWS) - ₹375, எஸ்சி (SC) /எஸ்டி (ST) / மூன்றாம் பாலினம் (Third gender) - ₹350

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு செப்டம்பர் 2009 முதல் திருவாரூரில் இருந்து செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூரில், வழங்கப்படும் இளங்கலைப் பட்டப் படிப்புகளின் விவரங்கள்:

1. இளங்கலை அறிவியல் – வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல்,கணிதம், இயற்பியல், (B.Sc Honours / Research) (பி.எஸ். சி ஆனர்ஸ் / ஆய்வு) - (4 ஆண்டுகள்)

2. இளங்கலை பொருளாதாரம் (B.A Honours / Research) (பி .ஏ. ஆனர்ஸ் / ஆய்வு) - (4 ஆண்டுகள்)

3. இளங்கலை - இசை (B.P.A Honours / Research) (பி பி ஏ. ஆனர்ஸ் / ஆய்வு) - (4 ஆண்டுகள்)

4. இளங்கலை - ஜவுளி (பி.எஸ்சி.,) ஜவுளி தொழில் நுட்பவியல் (பி.எஸ்சி.,), ஜவுளி வணிகப் பகுப்பாய்வு (பி பி ஏ.) - (மூன்று ஆண்டுகள்) (கோயம்புத்தூரில் உள்ள SVPISTM நிறுவனத்தில் வழங்கப்படுகிறது)

புதிய மாற்றம்:

இந்த ஆண்டு முதல் புதிய மாற்றங்களின் படி, மாணவர்கள் 12-ம் வகுப்பில் எந்த பாடத்திலும் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்திற்கு தேர்வு எழுதலாம்,

புதிய மாற்றங்கள்படி, 12-ம் வகுப்பில் படிக்கும் பாடப்பிரிவைதான் உயர்கல்வியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்துகொள்ளலாம் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், க்யூட் தேர்வில் 12-ம் வகுப்பில் பாடப்பிரிவிற்கு ஏற்ற பாடங்கள் என்று இல்லாமல், மாணவர்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து அதற்கான தகுதியான பாடங்களுக்கான தேர்வை எழுதலாம்.

உதாரணத்துக்கு ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுத்து படித்திருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டங்களில் வரலாறு படிக்க வேண்டும் என்றால் க்யூட் தேர்வில் அதற்கான தகுதி பாடங்களை தேர்வு செய்து தேர்வு எழுதினால் அவர் வரலாறு படிக்கலாம். அதேபோன்று 12 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்து படித்திருந்து இளங்கலை அளவில் இயற்பியல் அல்லது வேதியல் அல்லது ஏதோ ஒன்று அறிவியல் பாடம் பிரிவு படிக்க விருப்பப்பட்டால் அதற்கான தகுதி பாடங்களை எடுத்து தேர்வு எழுதி விரும்பக்கூடிய பாடங்களை இளங்கலை பிரிவில் படிக்கலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget