TN Rain: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் இன்று இரவு கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, தேனி , மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 2, 2025
Also Read: 2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
அடுத்த 7 தினங்களுக்கு வானிலை நிலவரம்:
02-03-2025;
தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முத மிதமான மழை பெய்யக்கூடும்.
03-03-2025:
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
04-03-2025 முதல் 08-03-2025 வரை;
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து இனங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:
02-03-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
03-03-2025 முதல் 06-03-2025 வரை: அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
03-03-2025 முதல் 06-03-2025 வரை; தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (02-03-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (03-03-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள்:
02-03-2025 முதல் 06-03-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

