மேலும் அறிய

காலம் மாறும், காட்சி மாறும், ஆட்சியும் மாறும் அப்போது கவனித்து கொள்கிறோம் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

மின்கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து கரூர் வெங்கமேட்டில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலம் மாறும், காட்சி மாறும், ஆட்சியும் மாறும் அப்போது கவனித்து கொள்கிறோம் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய விஜயபாஸ்கர், “தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காய்கறி விலை, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் பொம்மை முதல்வரின்  பொய்யான தேர்தல் வாக்குறுதியால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மின்சார உயர்வு காரணமாக அனைத்து விலை வாசியும் தமிழகத்தில் உயர்ந்துள்ளது. தொழில் நகரங்களில் மின்சாரம் உயர்ந்தால் தொழிற்சாலைகள் இழுத்து மூடும் நிலை உருவாகி வருகிறது. இந்த நிலை நீடித்தால் திமுக ஆட்சியில்  கஞ்சி தொட்டி தொடங்கும் நிலை ஏற்படும் என்ற அவர், தமிழகத்தில் வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளனர். பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களான காய்கறி விலை, மளிகை பொருட்கள் அனைத்தும் கடுமையாக உயர்ந்துள்ளது. செந்தில்பாலாஜி, துர்கா ஸ்டாலின் தயவில் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்து வருகிறார். தமிழகத்தில் டாஸ்மாக் துறையில் உள்ள 5500 மதுகடையில் 4000 கடைகளில் ஏலம் விடாமலே பார் நடத்தி கொள்ளை அடித்துள்ளார். கம்பெனியில் இருந்து 50 சதவீதம் சரக்கு பில் இல்லாமல் கடை மற்றும் பார்களில் விற்பனை செய்து  கிடைத்த பணத்தை ஸ்டாலின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளார். செந்தில்பாலாஜி. திமுக, கூட்டணி கட்சிகள் செந்தில் பாலாஜிக்கு ஏன் வக்காலத்து வாங்குகின்றனர் என்பது மர்மமாக உள்ளது. செந்தில் பாலாஜி தப்பு செய்யாதவர் என்றால் ஏன் விசாரணைக்கு செல்ல பயப்படுகிறார்?  இவருக்கு  ஸ்டாலின் குடும்பம் துணை நிற்கிறது. இதில் உள்ள  மர்மம் என்ன என்பது தெரியவில்லை?

காலம் மாறும், காட்சி மாறும், ஆட்சியும் மாறும் அப்போது கவனித்து கொள்கிறோம் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் ஒரு அரசாங்கம் நடந்தால், கரூரில் மட்டும் தனி அரசாங்கம் நடந்து வருகிறது. சாராயத்தில் எப்படி ஊழல் செய்யலாம் என திட்டமிட்டு கொடுத்தவர் செந்தில்பாலாஜி. மறை கழண்டு போய்விட்டது. அமைச்சர் முத்துசாமிக்கு காலை 7 மணிக்கு குடித்தால் அவன் குடிகாரன்  இல்லை என்கிறார். திமுகவிற்கு சென்றதும் அவருக்கும் மறை கழண்டுவிட்டது. கரூரில், அதிமுக கூட்டம், ஆர்ப்பாட்டம் என எது நடந்தாலும் உயர் நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற முடிகிறது. காலம் மாறும் காட்சி மாறும் ஆட்சியும் மாறும் அப்போது கவனித்து கொள்கிறோம். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. அதை மறைத்து வைக்க முயாமல் உதயநிதியும், சபரீசனும் தவியாய் தவிக்கின்றனர் என கூறினார். கரூரில் தினசரி 1500 லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. நல்ல தலைவராக இருக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஊழல்வாதிக்கு துணைபோக கூடாது. போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. 4000 பேருந்து ஓடவில்லை. இதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏன் பேசவில்லை. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை பொற்காலமாக இருந்தது. தற்போது, பேருந்துக்கு பிரேக் பிடிக்கவில்லை என நிறுத்தும் அவல நிலை இதான் திராவிட மாடல் ஆட்சி. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஏழை எளிய மாணவர்கள் 600 பேர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. கள்ளச்சாரயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இது பற்றி யாராவது வாய்திறக்கிறார்களா? வைகோ எங்கு இருக்கிறாறோ அந்த இடம் முடிந்து விடும். விரைவில் திமுக முடிந்து விடும். விஷசாராயம் குடித்து 22 பேர் இறந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு கொடுத்தனர். அரசு ஊழியர்கள் உயிர் இழந்தால் அவர்களது குடும்பத்திற்கு 2 லட்சம் கொடுக்கிறார்கள் இதான் திராவிட மாடல் ஆட்சி? அவல நிலையில் திமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்” என்றார்.

காலம் மாறும், காட்சி மாறும், ஆட்சியும் மாறும் அப்போது கவனித்து கொள்கிறோம் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Embed widget