India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England 2nd ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 305 ரன் இலக்கு.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 304 ரன் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியாவுக்கு 305 ரன் இலக்கு.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணி டி-20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து 2-வது ஒருநாள் போட்டி:
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாராபடி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்க் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 3034 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரன பென் டெக்கட் 56 பந்துகளில் 10 பவுண்ட்ரிகளும் 65 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
சால்ட் 26 ரன்கள், ஜோ ரூட் 72 பந்துகளில் 6 பவுண்ட்ரிகளுடன் 69 ரன்களை எடுத்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 34 ரன்கள் எடுத்தார். அதிரடி ஆட்டக்காரரான லேம் லிவிங்ஸ்டோன் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஆட்டத்தின் இறுதிகட்ட ஒவர்களில் அடில் ரஷித் மூன்று பவுண்டரிகளுடன் 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து பேட்ஸ்மென்ஸ் ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்தாலும் இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க தவறவில்லை. முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஸ்ப்பினர் ரவீந்திர ஜடேஜா 35 ரன் கொடுத்து மூன்று விக்கெட்களை எடுத்தார். இந்தியாவுக்கு 305 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

