ADMK Case LIVE : ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் - இபிஎஸ் வசமான அதிமுக: தொண்டர்கள் உற்சாகம்
ADMK Case LIVE updates: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட இருக்கிறது.

Background
ADMK Case LIVE : ஓ. பன்னீர்செல்வம் - மிட்டல் சந்திப்பு!
தேனியில் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த மிட்டல் நட்பு ரீதியாக சந்தித்துள்ளார்.
இரட்டை இலை இன்னும் பலவீனம் அடையும் - டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இரட்டை இலையை கொடுத்தாலும் அது சோபிக்காது. அது இன்னும் பலவீனம் அடையும். வருங்காலத்தில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால் தான் திமுக என்னும் தீயசக்தியை வீழ்த்த முடியும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “இரட்டை இலை கிடைச்சிடுச்சின்னு ஈரோடு கிழக்குல எடப்பாடி பழனிசாமி தரப்பு வெற்றி பெற முடியுமா? . ஏற்கனவே இரட்டை இலையோட சட்டமன்ற தேர்தல்ல ஆட்சி அதிகாரம், பண பலத்தோட போட்டியிட்டப்போது கூட ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.இது எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்காலிகமான வெற்றி தான்” எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தர்மத்தின் பக்கம் தீர்ப்பு : திண்டுக்கல் சீனிவாசன்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவமாக எடப்பாடியை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். கடவுள் எங்களுடன் இருக்கிறார். தர்மம் எங்களுடன் இருக்கிறது. தெருத்தெருவாக மக்களின் நாடியை பிடித்து பார்த்துள்ளோம். குறைந்தது 50 ஆயிரம், அதிகபட்சமாக ஒரு லட்சம் வாக்குகள் வெற்றி பெறுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு..!
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தர்மம் வென்றது, ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கிறது - கேபி முனுசாமி
தர்மம் வென்றது. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் வெற்றி அடைந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒன்றரை கோடி தொண்டர்களின் உள்ளம் குளிர்ந்திருக்கிறது - கேபி முனுசாமி