Pugar Petti: கம்பம் நகராட்சியில் நிதி இல்லையாம்! சொந்த செலவில் சாக்கடைகளை சீரமைக்கும் பொது மக்கள்?
தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் குறிப்பாக பார்க்கப்படுவதும் அதிக அளவில் மக்கள் போக்குவரத்துகள் உள்ள தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமாகவும் பார்க்கப்படுவது கம்பம் நகராட்சி.
தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் குறிப்பாக பார்க்கப்படுவதும் அதிக அளவில் மக்கள் போக்குவரத்துகள் உள்ள தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமாகவும் பார்க்கப்படுவது கம்பம் நகராட்சி. தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய சாலைகள் இருப்பதால் கேரள மாநிலத்தவர் அதிகளவில் கம்பம் நகருக்குள் வந்து செல்வர். தினந்தோறும் காய்கறிகள் வாங்குவதற்கும், வணிக மற்றும் வர்த்தக ரீதியான போக்குவரத்துகள் என கேரள மாநிலத்தவரின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கம்பம் நகராட்சிக்கு. இந்த கம்பம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் உள்ளன.
இதில் கம்பம் நகராட்சிக்கு செல்லும் முக்கிய சாலையாகவும், தினசரி உழவர் சந்தை செயல்படும் சந்தைக்கு செல்லும் கம்பத்திலேயே பெரிய வழி பாதையாவும் , சுமார் 800 க்கு மேற்பட்ட மாணவிகள் பயிலும் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் விளங்கும் நகராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி தெருவில் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தவும், சாக்கடை கழிவுகள் முறையாக செல்வதற்கும் நகராட்சி நிர்வாகத்தால் இந்த சாலையில் உள்ள சாக்கடைகள் தோண்டப்பட்டது. சுமார் 6 மாதத்திற்கு முன்பு தோண்டப்பட்ட சாக்கடை சீரமைக்கப்படாமல் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்கள், உணவகங்கள் என எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துகள் அதிகம் உள்ள சாலையில் சாக்கடை கழிவுகள் தேங்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் தோண்டப்பட்டு சுமார் 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் சாலையையோ, சாக்கடையையோ சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால் சாலை மற்றும் சக்கடை கட்டுவதற்கு நகராட்சியில் போதுமான நிதி இல்லை என்று அதிகாரிகள் வட்டாரத்தில் மெத்தனமாக பதிலளிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Karthigai Deepam: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சாக்கடை சீரமைக்க நகராட்சியால் தோண்டப்பட்டு சுமார் 6 மாதத்திற்கு மேலாகியும் சாக்கடை கட்டப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் தங்கள் நிறுவனம் மற்றும் வீடுகள் முன்பு தாங்களே முன்வந்து சாக்கடை வசதி செய்துகொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். பாரமரிப்புக்காக தோண்டப்பட்டு சீரமைக்கப்படாமல் இருக்கும் சாலை மற்றும் சாக்கடை வசதிகளை விரைவில் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர இப்பகுதி மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்