மேலும் அறிய

Train Cancelled List: டெல்டா மாவட்டங்கள் புறக்கணிப்பு? - போராட்டத்தால் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்!

டெல்டா மாவட்டங்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே-ஐ கண்டித்து அனைத்து கட்சிகள் சேவை சங்கங்கள் சார்பில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தால் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.

டெல்டா மாவட்டங்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே கண்டித்து அனைத்து கட்சிகள் சேவை சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட தொடர் ரயில் மறியல் போராட்டத்தால் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.

ரயில்கள் நிறுத்தம்:
 
06688 என்ற எண் கொண்ட திருவாரூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலானது,  இன்று காலை 8.15 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில், இன்று காரைக்கால் அடையவுள்ள நிலையில், நானிலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

06197 என்ற எண் கொண்ட திருவாரூர்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலானது,  இன்று காலை 8.10 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில், இன்று காரைக்கால் அடையவுள்ள நிலையில், முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 

16188 என்ற எண் கொண்ட எர்ணாகுளம்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலானது,  நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில், இன்று காரைக்கால் அடையவுள்ள நிலையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 

06404 என்ற எண் கொண்ட மன்னார்குடி- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலானது,  இன்று காலை 8.35 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில், இன்று மயிலாடுதுறை அடையவுள்ள நிலையில், திருவாரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில்பெட்டிகள் பராமரிப்பு பணி நடப்பதால், ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் இன்றிரவு 9 மணிக்கு பதில் இரவு 11:30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்:

டெல்டா மாவட்டங்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேவை கண்டித்தும், கரோனா காலத்துக்கு முன்னால் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், திருவாரூர் நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும், மன்னார்குடியில் இருந்து கோவை செல்கின்ற செம்மொழி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் திருவாரூர் வரை நீட்டித்து, அங்கு இன்ஜின் மாற்றி எடுத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மயிலாடுதுறை பயணிகள் ரயிலை நன்னிலம் ரயில் நிலையத்தில் மறித்து திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்    தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி என்ற இடத்தில், மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ரயில் முன்பாக நடந்தே வந்தனர், எக்ஸ்பிரஸ் விரைவுரையிலும் மறியல் செய்தவர்கள் பின்னால் மெதுவாக இயக்கப்பட்டது.

Train Cancelled List: டெல்டா மாவட்டங்கள் புறக்கணிப்பு? - போராட்டத்தால் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்!

கொரடாச்சேரி அருகே கிளரியம் வந்தடைந்தபோது , அங்கு ஏற்கனவே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டிருந்த, திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, நாகை தொகுதி எம்பி எம் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வை. செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ் எம் பி துரைவேலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன் உட்பட அரசியல் கட்சியினரும்  இணைந்து முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூறுகையில், "மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் தினம்தோறும் நீடாமங்கலத்தில் ஒரு மணி நேரம் நின்று செல்கிறது. இதனால் மருத்துவமனைக்கு செல்பவர்கள் வெளியூருக்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர் ரயில் நிலையம் வந்து என்ஜின்களை மாற்றிக்கொண்டு மீண்டும் நீடாமங்கலம் வழியாக சென்றால் திருவாரூர் சுற்றுவட்டார பகுதி மக்களும் பயனடைவர். மேலும் போக்குவரத்து பாதிப்பும் இருக்காது. ஆகையால் ரயில்வே நிர்வாகம் இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் மேலும் பழமை வாய்ந்த கொரடாச்சேரி பேரளம் முத்துப்பேட்டை ரயில் நிலையங்களில் விரைவு ரயில் நிறுத்திச் செல்ல வேண்டும் இந்த இரண்டு கோரிக்கைகளை உடனடியாக ரயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம் ஆனால் எந்த ஒரு கோரிக்கைக்கும் ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை ஆகையால் தற்பொழுது தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என தெரிவித்தார்.

இந்நிலையில், போராட்டம் காரணமாக பல ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Embed widget