மேலும் அறிய
பட்ஜெட்டில் விட்டுப்போன வாக்குறுதிகள்; அறிவிப்புகள் வெறும் காப்பியா? வெளியான லிஸ்ட்!
இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தார்.

தங்கம் தென்னரசு
Source : twitter
திமுக பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் அதிமுகவுடையது எனவும் கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
2025 – 2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தார். அதன்படி,
- டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்ன ஆனது?
- பழைய ஓய்வூதியம், கல்விக்கடன் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
- அதிமுக ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே இப்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.
- திமுகவின் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
- காலை உணவு திட்டம் புதிய திட்டம் இல்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான்.
- ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
- நெல், கரும்புக்கு அறிவித்த ஆதார விலை குறித்த அறிவிப்பு இல்லை.
- நீர் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?
- 73 வருடங்களில் தமிழகத்தின் கடன் ரூ. 5.18 லட்சம் கோடி மட்டுமே. திமுக ஆட்சியி 3 ஆண்டுக்ளைல் 3.54 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர்.
- கடன் வாங்கிதான் அரசை நடத்த வேண்டியுள்ளது. கடன் வாங்கி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வருவாயும் அதிகரிக்கிறது. கடனும் அதிகரிக்கிறது. ஆனால் திட்டங்கள் எதுவும் இல்லை. கடன் வாங்காமல் வருவாயை பெருக்கி அரசை நடத்த வேண்டும்.
- 3.50 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது.
- கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 9 மாதங்களில் எப்படி 40000 காலிப்பணியிடங்களை நிரப்புவார்கள்?
- இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியுள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.
- 2026ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக வாக்குறுதிகளை வாரி இரைத்துள்ளனர்.
- இது விளம்பர பட்ஜெட். வெற்று பட்ஜெட்” என சாடியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement