TN Budget 2025: சொன்னதைச் செய்தோமா? பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து… திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள்!

திமுக அரசின் கடைசி முழு நேர பட்ஜெட் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்தல் நேரத்தில் திமுக முன்வைத்திருந்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளில் கூறி, அறிவிப்பாக வெளியிடாதவை!
எதிர்பார்ப்பைக் கிளப்பிய, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்லாண்டு காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து இன்றைய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
காலிப் பணியிடங்கள் என்ன ஆகின?
5 ஆண்டில் 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக அரசு கூறியது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 40 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
100 நாள் வேலை திட்டம்
100 நாள் வேலை திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும், ஊதியம் அதிகரிக்கப்படும் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி இதுநாள் வரை நடைமுறைக்கு வரவில்லை.
அதேபோல் நெல், கரும்புக்கு அறிவித்த ஆதார விலை குறித்த அறிவிப்பு இல்லை.
திமுக அரசு அறிவித்த ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள், இன்னும் திட்டங்களாக வடிவம் பெறவில்லை. ஏன் அறிவிப்பே வெளியாகவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

