மேலும் அறிய
மதுரையில் இளைஞரின் அதிர்ச்சி செயல்.. கையில் சரவெடி வெடித்த வீடியோ வைரல், ஆபத்தை உணராமல் கொண்டாட்டம்!
மதுரையில் இளைஞர்கள் ஒருவர் ஆபத்தை உணராமல் கையில் பட்டாசுகளை வைத்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆபத்தாக பட்டாசு வெடித்த இளைஞர்
Source : whatsapp
மதுரையில் இளைஞர் ஒருவர் ஆபத்தை உணராமல் சரவெடியை இரண்டு கைகளிலும் பிடித்து வெடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் தீபாவளி கொண்டாட்டம் 2025
மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வீடுகளின் முன்பாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும், ஆர்வமுடன் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி
இந்நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள சரவணா மருத்துவமனை பின்புறம், தீபாவளியை முன்னிட்டு அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் இளைஞர் ஒருவர், ஆபத்தை உணராமல் தனது இரண்டு கைகளிலும் சரவெடி பட்டாசுகளை பிடித்து பற்ற வைத்து வெடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்கும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் என அறிவித்திருந்த நிலையில், இதை சிறிதும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஒருவர் ஆபத்தை உணராமல் கையில் பட்டாசுகளை வைத்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















