மேலும் அறிய
மதுரையில் உணவகங்கள் மூடும் அபாயம்? வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவு விலையை இருமடங்காக்கும் ஹோட்டல் சங்கத்தின் எச்சரிக்கை!
மதுரையிலும் ஜூம் கூட்டம் மூலம் ஆலோசனை நடத்தி கடைகளை மூடும் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாடு
Source : whatsapp
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – ஹோட்டல் சங்கம் எச்சரிக்கை.
உணவகங்களை நடத்துவது மிகவும் சிரமம்
தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மதுரையில் உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது...,” வணிக பயன்பாட்டிற்கான கமர்சியல் சிலிண்டர்கள் போதிய அளவில் விநியோகிக்கப்படாததால் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் டீலர்களுக்கு கமர்சியல் சிலிண்டர் வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், உணவகங்களுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 2,000க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர்கள் தற்போது கறுப்புச் சந்தையில் ரூபாய் 3,000 வரை விற்கப்படுவதாகவும் வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் உணவகங்களை நடத்துவது மிகவும் சிரமமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுகளின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகும்
சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தோசை, இட்லி போன்ற அத்தியாவசிய உணவுகளின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என்றும், இது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் என்றும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். மதுரையில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல், மதுரையின் அடையாளமாக விளங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்காக மதுரையில் தங்கி இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கும் உணவு, காபி, டீ போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத அவல நிலை உருவாகும் என கூறப்படுகிறது.
மதுரையிலும் ஜூம் கூட்டம் மூலம் ஆலோசனை நடத்தி கடைகளை மூடும் நடவடிக்கை
பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே சில உணவகங்கள் மூடப்படத் தொடங்கியுள்ளதாகவும், மதுரையிலும் ஜூம் கூட்டம் மூலம் ஆலோசனை நடத்தி கடைகளை மூடும் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு வணிக சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2026
தமிழ்நாடு
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















