மேலும் அறிய

Madurai - சிலிண்டர் தட்டுப்பாடு டீ, காபி கடைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - டீ, காபி வர்த்தக சங்கம் கவலை !

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மதுரையில் தேனீர் கடைகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். - சங்க நிர்வாகிகள் பேட்டி

தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மதுரையில் உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதே போல் மதுரையில் முக்கிய உணவுப் பொருளாக பார்க்கப்படும் டீ - காபி கடைகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டீ - காபி சங்கத்தினர் பேட்டி

மதுரையில் மிகப்பெரிய வணிகமாக இருக்கும் டீ & காபி விற்பனையின் சிரமம் குறித்து  மதுரை காபி, டீ வர்த்த சங்கம் துணைச் செயலாளர் எம்.கே செல்வகுமார் நம்மிடம் தெரிவிக்கையில்..," உணவுப் பொருட்களில் அடிப்படையானது டீ காபி தான் ஏனெனில் பொதுமக்கள் காலை எழுந்தவுடன் டீ காபி கடைகள் எல்லாம் தேடுவார்கள் குறிப்பாக மதுரையில் எல்லா தெருக்களிலும் டீ காபி கடைகள் தான் அதிகமாக இருக்கும் அவர்களின் வேலையை டீ காபி கடைகளில் இருந்து தான் துவங்கும். இந்த சூழ்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எங்களை டீக்கடை உரிமையாளர்களை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நேற்று வணிக சிலிண்டர் 1980 ரூபாய்க்கு தருவோம் என இருந்த சிலிண்டர் 2200 க்கு தான் தருவோம் என தெரிவித்தார்கள் சரி கொடுங்கள் என கேட்டபோதும் கூட சிலிண்டர் கிடைக்கவில்லை. கூடுதல் விலைக்கு கூட சிலிண்டர் கிடைக்காததால் மிகவும் சிரமாக உள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் உடனடியாக சரி செய்து வணிகர்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் இதையினை சரி செய்யவில்லை என்றால் மிகப்பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும். நேரடியாக மறைமுகமாக பலரும் இதனால் பாதிப்படைவார்கள்" எனவும் தெரிவித்தார்.

மேலும் ஹோட்டல் துறை சங்கத்தினர் இது தொடர்பாக கூறுகையில்..,” வணிக பயன்பாட்டிற்கான கமர்சியல் சிலிண்டர்கள் போதிய அளவில் விநியோகிக்கப்படாததால் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் டீலர்களுக்கு கமர்சியல் சிலிண்டர் வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், உணவகங்களுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரூ.2,000க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர்கள் தற்போது கறுப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுவதாகவும் வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் உணவகங்களை நடத்துவது மிகவும் சிரமமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தோசை, இட்லி போன்ற அத்தியாவசிய உணவுகளின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என்றும், இது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் என்றும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
 
உடனடியாக சரி செய்ய கோரிக்கை
 
மதுரையில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல், மதுரையின் அடையாளமாக விளங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்காக மதுரையில் தங்கி இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கும் உணவு, காபி, டீ போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத அவல நிலை உருவாகும் என கூறப்படுகிறது. பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே சில உணவகங்கள் மூடப்படத் தொடங்கியுள்ளதாகவும், மதுரையிலும் ஜூம் கூட்டம் மூலம் ஆலோசனை நடத்தி கடைகளை மூடும் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு வணிக சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin : டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு... தோல்வியில் முடிந்த தொகுதி மறுவரையறை . சம்பவம் செய்த ஸ்டாலின்
MK Stalin : டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு... தோல்வியில் முடிந்த தொகுதி மறுவரையறை . சம்பவம் செய்த ஸ்டாலின்
TVK Vijay: முதன் முறையாக வீடு, வீடாகச் சென்று ஓட்டுக் கேட்ட விஜய்! பெரம்பூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!
TVK Vijay: முதன் முறையாக வீடு, வீடாகச் சென்று ஓட்டுக் கேட்ட விஜய்! பெரம்பூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!
Delimitation Bill Fails: தோல்வியில் முடிந்த தொகுதிமறுவரையறை- மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. ஷாக்கில் பாஜக
Delimitation Bill Fails: தோல்வியில் முடிந்த தொகுதிமறுவரையறை- மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. ஷாக்கில் பாஜக
Women Reservation Bill 2026: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி.. மோடி அரசுக்கு பின்னடைவு! மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்தது எப்படி?
Women Reservation Bill 2026: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி.. மோடி அரசுக்கு பின்னடைவு! மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்தது எப்படி?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin : டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு... தோல்வியில் முடிந்த தொகுதி மறுவரையறை . சம்பவம் செய்த ஸ்டாலின்
MK Stalin : டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு... தோல்வியில் முடிந்த தொகுதி மறுவரையறை . சம்பவம் செய்த ஸ்டாலின்
TVK Vijay: முதன் முறையாக வீடு, வீடாகச் சென்று ஓட்டுக் கேட்ட விஜய்! பெரம்பூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!
TVK Vijay: முதன் முறையாக வீடு, வீடாகச் சென்று ஓட்டுக் கேட்ட விஜய்! பெரம்பூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!
Delimitation Bill Fails: தோல்வியில் முடிந்த தொகுதிமறுவரையறை- மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. ஷாக்கில் பாஜக
Delimitation Bill Fails: தோல்வியில் முடிந்த தொகுதிமறுவரையறை- மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. ஷாக்கில் பாஜக
Women Reservation Bill 2026: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி.. மோடி அரசுக்கு பின்னடைவு! மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்தது எப்படி?
Women Reservation Bill 2026: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி.. மோடி அரசுக்கு பின்னடைவு! மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்தது எப்படி?
Cameron Green: இப்போதான் வேலை செய்து 25 கோடி! ஃபார்முக்கு வந்த கிரீன் - கொல்கத்தாவை காப்பாற்றுவாரா?
Cameron Green: இப்போதான் வேலை செய்து 25 கோடி! ஃபார்முக்கு வந்த கிரீன் - கொல்கத்தாவை காப்பாற்றுவாரா?
TVK Vijay: பெரம்பூருக்கு திடீர் விசிட்! வாசலில் விசில் கோலம் வரைந்த விஜய்!
TVK Vijay: பெரம்பூருக்கு திடீர் விசிட்! வாசலில் விசில் கோலம் வரைந்த விஜய்!
Hormuz Strait: கேட்டை ஓபன் பண்ணியாச்சு.. கீரின் சிக்னல் கொடுத்த ஈரான்! நன்றி சொன்ன டிரம்ப்
Hormuz Strait: கேட்டை ஓபன் பண்ணியாச்சு.. கீரின் சிக்னல் கொடுத்த ஈரான்! நன்றி சொன்ன டிரம்ப்
Valparai Accident: சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்! – வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு
சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்! – வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு
Embed widget