மேலும் அறிய

Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்

LPG Gas Cylinder Indane: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

LPG Gas Cylinder Indane: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் சூழல் நீடிப்பதால் எரிபொருள்
தேவைக்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் வலியுறுத்தல்.

கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் நிறுவனம்:

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் சூழல் நீடிப்பதால், தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது. தங்கள் தேவைக்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.

கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு - மத்திய அரசு அதிரடி

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வருகை குறைந்துள்ளது. இதன் விளைவாக ஒரு சிலிண்டரை வாங்கிய பிறகு மற்றொரு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை மத்திய அரசு 25 நாட்களாக நீட்டித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோக தட்டுப்பாட்டை குறைக்க வீட்டு உபயோக சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படியே, வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு வழங்குதில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு உத்தரவு..

இதனிடையே, தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு? தேவை எவ்வளவு? உடனடியாக தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாம்.

முடங்கும் ஓட்டல்கள்:

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களும் இன்று ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதால், உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், இன்றுடன் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அச்சம் தெரிவித்துள்ளனர். பல டீலர்களும் நேற்று முதலே உணவகங்களுக்கான விநியோகத்தை நிறுத்திவிட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக ஓட்டல்களில் வேலை நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக, அடையாறு ஆனந்தபவன் உரிமையாளர் சீனிவாச ராஜா தெரிவித்துள்லார்.  மின்சார அடுப்பு போன்ற வசதிகளை கொண்ட ஓட்டல்கள் ஓரளவுக்கு தாக்குப்பிடிக்கலாம் எனவும்,   எல்பிஜி சிலிண்டரை மட்டுமே நம்பியிருக்கும் சிறிய ஓட்டல்கள் உடனடியாக பாதிக்கப்படுகின்றன எனவும் கவலை தெரிவித்துள்ளார்.  முன்னதாக கர்நாடகாவில் ஏற்கனவே இன்று ஓட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்
வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்
மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!
மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!
Hormuz Indian LPG Ship: இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
சபரிமலை முதல் மசூதி வரை: பெண்களின் உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை நாளை! முக்கிய தீர்ப்பு?
சபரிமலை முதல் மசூதி வரை: பெண்களின் உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை நாளை! முக்கிய தீர்ப்பு?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: தலைக்கு தில்ல பாத்தியா.! ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 10 நிபந்தனைகள் விதித்த ஈரான்; அது என்ன.?
தலைக்கு தில்ல பாத்தியா.! ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 10 நிபந்தனைகள் விதித்த ஈரான்; அது என்ன.?
Gold and silver rate today : தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
Top 10 News Headlines: வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்
வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்
US Iran War Pakistan: 45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
Trump Iran War: “ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
“ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?
TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?
Tamil Nadu Assembly Election : ஒரு தொகுதிய இத்தனை பேரா குறிவைக்கிறது.!! வெறிகொண்டு வேட்புமனு தாக்கல்- அப்படி எந்த தொகுதி.?
ஒரு தொகுதிய இத்தனை பேரா குறிவைக்கிறது.!! வெறிகொண்டு வேட்புமனு தாக்கல்- அப்படி எந்த தொகுதி.?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
Embed widget