மேலும் அறிய

இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!

அரசு மருத்துவமனைகளில் இனி நிரந்தரப் பணி கிடையாதா? ஒப்பந்த நியமனம் மட்டும்தானா? இட ஒதுக்கீடு இருக்காதா? சமூகநீதி படுகொலையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

அரசு மருத்துவமனைகளில் இனி நிரந்தர நியமனங்கள் இல்லை; ஒப்பந்த நியமனங்கள் மட்டுமே - இதுதான் சமூகநீதி காக்கும் லட்சணமா? என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும்  மருத்துவர்கள் தவிர பிற பணிகளுக்கு இனி நிரந்தர அடிப்படையில் எவரையும் நியமிக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி உண்மையானதாக இருந்தால் சமூகநீதிக்கும், கண்ணியமான மனிதவாழ்க்கைக்கும் எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

நிரந்தரமாக நியமிக்கப்படக் கூடாது

சென்னை தலைமைச் செயலகத்தில்  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில்   நடைபெற்ற மக்கள் நலவாழ்வுத் துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ,  நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு செலவுகளைக் குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புனர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் இனி நிரந்தரமாக நியமிக்கப்படக் கூடாது என்றும், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் செய்திகள்  தெரிவிக்கின்றன.

அரசுத் துறைகளில் டி பிரிவு பணிகளில் மட்டும் ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சி பிரிவு பணியிடங்களுக்கும் இந்த முறையை நீட்டிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க   ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எம்.எப் பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ. ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்தக் குழுவை 18.10.2022-ஆம் நாளிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழக அரசு அமைத்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அக்குழுவின் ஆய்வு வரம்புகள் மறு ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது.

முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் பொம்மைகள்தானா?

ஆனால், அவ்வாறு செய்யப்படாததால், பரூக்கி தலைமையிலான குழு பணியை தொடங்காத நிலையில், எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதையும் கடந்து இது போன்ற கொள்கை முடிவுகள் அமைச்சரவையில் தான் எடுக்கப்பட வேண்டும். மாறாக, இந்த முடிவை தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எடுக்கிறார்கள் என்றால் முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் பொம்மைகள் தானா?

சுகாதாரத் துறையில் ஏற்கனவே மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களையும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யும் நடைமுறை உள்ளது.  இந்த நடைமுறையே மாற்றப்பட வேண்டும்; அனைத்துப் பணியாளர்களும் நேரடியாக நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும்.

இட ஒதுக்கீடு இருக்காது

ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படும் போது  அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது.  இது சமூகநீதியை படுகொலை செய்யும்  செயலாகும். இது தான் திமுக அரசு  சமூகநீதியை  காக்கும் லட்சணமா? இதைத் தான் திமுக விரும்புகிறதா? என்பது குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும், மக்கள் நலவாழ்வுத்துறை உள்பட அனைத்துத் துறைகளில் ஒப்பந்த முறை நியமனங்கள் ரத்து செய்யப்படும்; நிரந்தர அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் நியமிக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget