மேலும் அறிய

CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?

CBSE Class 10 Exam Cancelled: மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து; மதிப்பீட்டு முறை எப்படி?

மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக, அங்கு நடைபெற இருந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முழுமையாக ரத்து செய்துள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, பெற்றோர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

தேர்வுகள் ரத்து மற்றும் ஒத்திவைப்பு

மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் குறிப்பாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதன்படி, மார்ச் 7 முதல் 11 வரை ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நடைபெறவிருந்த அனைத்து 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு

அதேசமயம், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. போர்ச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டு முறை 

10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அம்மாணவர்களுக்கான முடிவுகள் எவ்வாறு வெளியிடப்படும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கமளித்துள்ள சிபிஎஸ்இ, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண்கள், வாரியத்தால் உருவாக்கப்படும் ஒரு சிறப்பு மற்றும் நியாயமான மதிப்பீட்டு முறை (Objective criterion/ Special marking scheme) அடிப்படையில் கணக்கிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் முடிவுகள் வெளியாகும் முறை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் வரவேற்பு

வளைகுடா நாடுகளில் நிலவும் ஏவுகணைத் தாக்குதல் அபாயம் மற்றும் வான்வழிப் போக்குவரத்து முடக்கம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைப் பெற்றோர்களும் கல்வியாளர்களும் வரவேற்றுள்ளனர். மாணவர்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, அவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் - விஜய் அரசுக்கு சீமான் கொடுத்த வார்னிங் என்ன?
தமிழ்நாடு அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் - விஜய் அரசுக்கு சீமான் கொடுத்த வார்னிங் என்ன?
புதுச்சேரி எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு போலி சான்றிதழா? 15 மாணவர்களுக்கு நோட்டீஸ்
புதுச்சேரி எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு போலி சான்றிதழா? 15 மாணவர்களுக்கு நோட்டீஸ்
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
Embed widget