மேலும் அறிய

Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?

Gas Shortage: தட்டுப்பாடு பிரச்னைக்கு மத்தியில் வீட்டு பயன்பாடு உள்ளிட்ட நான்கு பிரிவினருக்கு தான், எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • அமெரிக்க-இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை, இயற்கை எரிவாயு விநியோகத்தை பாதித்துள்ளது.
  • கத்தார் எனர்ஜி உற்பத்தியை நிறுத்தியதால், இந்தியாவுக்கு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • அத்தியாவசியத் தேவைகளுக்கு 100% எரிவாயு விநியோகம் மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
  • உர ஆலைகளுக்கு 70%, பிற தொழில்களுக்கு 80% எரிவாயு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Gas Shortage: எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கும் 4 பிரிவுகள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா - இஸ்ரேலால் வந்த வினை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான கூட்டு ராணுவ நடவடிக்கையானது, உலகம் முழுவதற்குமான இயற்கை எரிவாயு விநியோகத்தை பாதித்துள்ளது. ஹார்மூஸ் நீர்வழிப்பாதை போர் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால், 750-க்கும் அதிகமான எரிபொருளை கொண்டுள்ள கப்பல்கள் விநியோகத்தை மேற்கொள்ள முடியாமல் சிக்கி தவிக்கின்றன. இந்தியா உள்நாட்டு தேவைக்கான எரிபொருளை 50 சதவிகிதம் சர்வதேச சந்தையில் இருந்து கொள்முதல் செய்கிறது. அதிலும் 20 சதவிகிதம் கத்தாரில் இருந்தே பெறப்படுகிறது. 

இந்தியாவிற்கான ஏற்றுமதி பாதிப்பு

கத்தாரில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி நிறுவனமான கத்தார் எனர்ஜி தனது உற்பத்தியை நிறுத்தியது. இதன் காரணமாக ஆசிய பிராந்தியங்களில் இயற்கை எரிவாயு விநியோக சங்கிலியை கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் இந்த சவால்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் பல்வேறு பிரிவுகளில் இயற்கை எரிவாயுவின் விநியோகத்திற்கும், பயன்பாட்டிற்குமான ஒழுங்குமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முக்கிய துறைகல் முன்னுரிமை பெறக்கூடிய 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கேஸ் சிலிண்டர் - எந்த 4 பிரிவுகளுக்கு முன்னுரிமை?

  • உள்நாட்டு பைப் இயற்கை எரிவாயு விநியோகம், போக்குவரத்துக்கான CNG, LPG உற்பத்தி, பைப்லைன் கம்ப்ரெஷர் ஃபியூல் மற்றும் பிற அத்தியாவசிய குழாய் செயல்பாட்டுத் தேவைகளுக்கு கடந்த ஆறு மாதங்களின் சராசரி அடிப்படையில் 100 சதவிகித இயற்கை எரிவாயு விநியோகம் தொடரும்
  • இரண்டாவதாக, உர ஆலைகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவது கடந்த ஆறு மாதங்களின் சராசரி எரிவாயு நுகர்வில் 70 சதவிகிதமாக உறுதி செய்யப்படும்.
  • மூன்றாவதாக, தேயிலைத் தொழில்கள், உற்பத்தி மற்றும் பிற தொழில்துறை நுகர்வோருக்கு தேசிய எரிவாயு க்ரிட் மூலம் எரிவாயு விநியோகம் கடந்த ஆறு மாதங்களின் சராசரி எரிவாயு நுகர்வில் 80 சதவிகிதம் வழங்கப்படும்
  • நான்காவதாக, அனைத்து எரிவாயு விநியோக அலகுகளும் கடந்த ஆறு மாதங்களின் சராசரி எரிவாயு நுகர்வில் 80 சதவிகிதத்தை,  தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு தங்கள் நெட்வொர்க்குகள் மூலம் வழங்குவதை உறுதி செய்யும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொழில் வல்லுநர்கள் சொல்வது என்ன?

இந்தியா இறக்குமதி செய்யும் எரிவாயுவில் சுமார் 40 சதவிகிதம் எல்என்ஜி குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்டு பேசியுள்ள எரிசக்தி, குறிப்பாக எரிவாயுவில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார நிபுணர் கிரித் பரேக்,  நெருக்கடி காலத்தில் இந்தியா தற்காலிகமாக எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தொழில்துறையில், குறிப்பாக மின்சாரத் துறையில் எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், மின்சாரத்தை உற்பத்தி செய்வது விலை உயர்ந்ததாக இருந்தாலும், இந்தியா மின் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே,  இந்தத் துறை அதிகம் பாதிக்கப்படாது. ஆனால் எரிவாயுவை ஒரு முக்கியமான வளமாகக் கொண்டு தங்கள் தொழில்களை நடத்தும் வணிகங்கள் அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். பெட்ரோலிய நிறுவனங்கள் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய அதிகப்படியான எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன” என எச்சரித்துள்ளார்.

Frequently Asked Questions

தற்போதைய எரிவாயு தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ன?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை காரணமாக ஹார்மூஸ் நீர்வழிப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு முக்கியமாக எங்கிருந்து வருகிறது?

இந்தியா தனது எரிபொருளில் 50% சர்வதேச சந்தையில் இருந்து கொள்முதல் செய்கிறது. இதில் 20% கத்தார் நாட்டில் இருந்து பெறப்படுகிறது.

எரிவாயு விநியோகத்தில் மத்திய அரசு எந்த 4 பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது?

உள்நாட்டு பைப் விநியோகம், CNG, LPG உற்பத்தி, பைப்லைன் கம்ப்ரெஷர் ஃபியூல், உர ஆலைகள், தேயிலைத் தொழில்கள், உற்பத்தி மற்றும் பிற தொழில்துறை நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தொழில்துறையினர் எரிவாயுவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்?

நெருக்கடி காலத்தில் எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். குறிப்பாக மின்சார உற்பத்தி மற்றும் ஹைட்ரஜன் உற்பத்திக்கு எரிவாயுவை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget