மேலும் அறிய

கொடைக்கானலில் முதன்முறை! மலைப்பூண்டு கண்காட்சி & பயிற்சி: அறியாத ரகசியம், மருத்துவ குணம், ஏற்றுமதி வாய்ப்புகள்!

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சியையொட்டி, பூண்டு கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற மலைகளின் இளவரசி என அழைக்கப்படும், கொடைக்கானலில் வருடந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும். இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை சார்பாகவும், சுற்றுலா துறை சார்பாக மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த நிலையில் தற்போது கோடை விழா  நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அவர்களின் பார்வைக்காக  பூக்களை கொண்டு பல்வேறு வடிவமைப்புகளில் காட்சி படுத்தும் விதமாக விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் கண்காட்சிக்கு வைக்கவுள்ளனர். 

கொடைக்கானலில் முதன்முறை! மலைப்பூண்டு கண்காட்சி & பயிற்சி: அறியாத ரகசியம், மருத்துவ குணம், ஏற்றுமதி வாய்ப்புகள்!

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 900 ஹெக்டேர் பரப்பளவில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதனால் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

பயிரிட்ட 120 நாட்களில் மலைப்பூண்டு அறுவடைக்கு வரும். கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும். இதில் காரத்தன்மையும் அதிகம். புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால் ஓராண்டு வரை கெடாமல் இருக்கும். கொடைக்கானல் மலைப்பூண்டு உட்பட நாடு முழுவதும் உள்ள பல வகையான பூண்டு, பூண்டின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் கண்காட்சி மற்றும் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் முதன்முறை! மலைப்பூண்டு கண்காட்சி & பயிற்சி: அறியாத ரகசியம், மருத்துவ குணம், ஏற்றுமதி வாய்ப்புகள்!

பிரையன்ட் பூங்காவில் மே மாதம் 63-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற உள்ள நிலையில்ம் மலர் கண்காட்சியை பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவர். அந்த சமயத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் பூண்டு கண்காட்சி நடத்த இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் இணைந்து நடப்பாண்டு மலர் கண்காட்சியையொட்டி, தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள பூண்டு ரகங்களை காட்சிப்படுத்துதல், தரமான பூண்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்தும், பூண்டில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்வது குறித்தும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget