மேலும் அறிய
Advertisement
திமுக கவுன்சிலர் அடித்து நொறுக்கிய பலகாரக் கடை; பேசி முடிக்கப்பட்ட பிரச்னை - உண்மையில் நடந்தது என்ன?
கொடுக்கல் வாங்கல் பிரச்னை திருமங்கலம் பேருந்து நிலையத்தில் பலகார கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்; சிசிடிவி காட்சியால் பரபரப்பு
மதுரையில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகார கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாங்கிய கடனுக்கு உள் வாடகை பணம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் கடை வைத்திருக்கும் லோகேஸ்வரி என்பவர் தனது அவசர தேவைக்காக செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரிடம் இரண்டு லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் தனது பெயரில் உள்ள கடையை ஆறுமுகம் என்பவருக்கு உள் வாடகைக்கு விட்டு அதற்குரிய வாடகை தொகையை கடன் வாங்கிய பாண்டியிடம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து ஆறுமுகம்டீக்கடை மற்றும் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். மாதம் வாடகை தொகையை பாண்டியிடம் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. முறையாக கட்டி வந்த நிலையில் அசல் தொகை முழுவதையும் செலுத்துமாறு பாண்டி ஆறுமுகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு ஆறுமுகம் பணம் நான் வாங்கவில்லை லோகேஸ்வரியிடம் கேளுங்கள் என கூறியுள்ளார். அதற்கு பாண்டி மாதம் மாதம் பணம் கட்டுவது நீங்கள் தானே எனக் கூறி பணம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உடனே கடையை காலி செய்
இதனால் பாண்டி தனது உறவினரான திருமங்கலம் 1வது வார்டு கவுன்சிலர் காசி பாண்டியிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாண்டிக்கு ஆதரவாக வந்த திமுக கவுன்சிலர் காசி பாண்டியன் ஆறுமுகத்திடம் கேட்டபோது கடைக்கு சொந்தக்காரரான லோகேஸ்வரியிடம் கேளுங்கள் எனக் கூறியதால் ஆத்திரமுற்ற காசி பாண்டி பிறகு நீ எதற்கு நகராட்சி கட்டிடத்தில் கடை வைத்து நடத்துகிறாய் உடனே கடையை காலி செய்த என வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடையில் இருந்த பலகார தட்டுகளை தூக்கி வீசி எறிந்தார்.
புகாரின் அடிப்படையில் திருமங்கலம் அதற்காக விசாரணை
உடனே அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து திமுக கவுன்சிலர் பாண்டியை அனுப்பி வைத்தனர். கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திமுக கவுன்சிலர் பலகார கடையை சூறையாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் அதற்காக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்பும் காவல்நிலையத்தில் சமரசம் பேசி முடித்துக் கொண்ட நிலையில் தான் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion