மேலும் அறிய
Advertisement
Aadhar Card Update: ஆதார் அப்டேட்... மதுரையில் வெயிலில் காத்திருந்த பொது மக்கள்
மதுரை மாவட்ட அரசு அலுவலகங்களில் உள்ள இ- சேவை மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் மையங்களை அதிகப்படுத்த வேண்டுமெனவும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குழந்தைகளுக்கான ஆதார் மற்றும் ஆதார் அப்டேட்டிற்காக மதுரை நேரடி ஆதார் சேவை மையத்தில் கடும்வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் - கைக்குழந்தைகளுடன் நீண்டநேரமாக காத்திருக்கும் தாய்மார்கள்.
ஆதார் அப்டேட் கால அவகாசம் நீட்டிப்பு - மதுரையில் வெயிலில் காத்திருந்த பொது மக்கள்
அனைத்து அரசு துறைகளில் பெறப்படும் ஆவணங்களில் ஒன்றான ஆதார் கார்டுகளில் கட்டணமின்றி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் -14ஆம் தேதி வரை நீட்டித்து ஆதார் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு விடுமுறைகாலம் என்பதால் ஆதார் கார்டுகள் கட்டணமின்றி அப்டேட் செய்வதற்கும், குழந்தைகளுக்கான ஆதார் கார்டுகளை எடுப்பதற்கும், ஏராளமான பொதுமக்கள் அரசு இ சேவை மையங்களுக்கு செல்கின்றனர். ஆனால் இ சேவை மையங்களில் ஆதார் எடுப்பதற்கான இணையதளம் மந்தமாக இருப்பதன் காரணமாகவும், மதுரை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான ஆதார் எடுப்பதற்கு குறைந்த எண்ணிக்கையிலான இ சேவை மட்டுமே உள்ள நிலையில் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள ஆதார் ஆணையத்தின் கீழ் செயல்படும் நேரடி ஆதார் மையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் காலை முதல் வருகை தரத்தொடங்கினர்.
- திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் - ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது
காலை 9 மணி முதல் மதுரை கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள ஆதார் மையத்திற்கு வருகைதர தொடங்கிய நிலையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்ததால் சாலை முழுவதிலும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் ஏராளமான தாய்மார்கள் குழந்தைகளோடு நீண்டவரிசையில் காத்திருந்தனர். மேலும் ஆதார் மையத்திற்குள் ஏசி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலும் மக்கள் ஒரே நேரத்தில் கூடியதால் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் சிறுவர்கள் , கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் முதியவர்கள் என அனைவரும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதே போல் அருகில் உள்ள உணவகங்களுக்கு செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் மரித்து வரிசையில் நின்றதன் காரணமாக உணவக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் கோரிக்கை என்ன?
மதுரை மாவட்ட அரசு அலுவலகங்களில் உள்ள இ- சேவை மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் மையங்களை அதிகப்படுத்த வேண்டுமெனவும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சுருளி சாரல் விழாவில் நாய்கள் கண்காட்சி - ஆர்வத்துடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே இங்கே கிளிக் செய்யவும் - "கடவுளை அரசியலில் இருந்து விலக்கி வையுங்க" சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion