800வது நாளாக தொடரும் போராட்டம்... போராட்டத்தில் கலந்து கொண்ட கௌதமன்
9வது முறையாக ஏகனாபுரம் கிராமத்தில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை 100% ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும், இல்லையெனில் இந்த திட்டத்தை கிராம மக்கள் செயல்படுத்த விட மாட்டார்கள், அதையும் மீறி அதிகாரிகள் திட்டத்தை செயல்படுத்த வந்தால் கிராம மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள், கிராம மக்கள் எச்சரிப்பதாக இயக்குனர் கௌதமன் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபையில் கலந்து கொண்ட பின் பேட்டி
பரந்தூர் விமான நிலையம் - Parandur Greenfield Airport
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மேலும் கிராமப்புறங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்புகளை நாளிதழ்களின் வெளியிட்டு நிலம் எடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் விலை நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படக்கூடிய ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறுபட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் - Parandur Greenfield Airport Protest
இந்நிலையில் போராட்டம் துவங்கி இன்றோடு 800 நாள் நிறைவடைந்து உள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 9வது முறையாக ஏகனாபுரம் கிராமத்தில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 6 முறை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கிராம சபை கூட்டம்
இன்று நடைபெற்ற கூட்டத்தில் வருகை தந்த அதிகாரிகளை அடுக்கடுக்காக கிராமங்களை வளச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளாமல் தடுத்து நிறுத்துவதால் பெரும் அவதிக்கு உள்ளாவதும், அதிகாரிகளை அடுக்கடுக்காக கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் , அதிகாரிகள் சிக்கி தவித்தனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்தித்த இயக்குனர் கௌதமன் பேசுகையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு வன்முறையை கையில் எடுத்து கிராம மக்களை ஏமாற்றி நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2008ஆம் ஆண்டு புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் அருகாமையில் உள்ள பன்னூர் பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டதை மறைத்து பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க ஏன் தீவிரம் காட்டுகிறது.
பல்வேறு குற்றச்சாட்டுகள்
கலைஞர் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் 6% நீர் நிலை மற்றும் 250 வீடுகள் மட்டுமே பாதிப்படைகிறது, அந்தப் பகுதியை முதலமைச்சர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரும், அமைச்சர்களும் அப்பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பு அபகரிக்க செய்து அப்பகுதியில் வணிக வளாகங்களும், விமான நிலையத்தைச் சார்ந்த கட்டுமானங்களும் கட்டும் எண்ணம் இருப்பதாலே அந்த திட்டத்தை பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சிக்கிறது, என பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
தமிழக அரசு பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை 100% ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும், இல்லையெனில் இந்த திட்டத்தை கிராம மக்கள் செயல்படுத்த விட மாட்டார்கள், அதையும் மீறி அதிகாரிகள் திட்டத்தை செயல்படுத்த வந்தால் கிராம மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள் என கிராம மக்கள் எச்சரிப்பதாக இயக்குனர் கௌதமன் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபையில், நடந்து முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.