மேலும் அறிய

Nimisha Priya:பிளட் மணி என்றால் என்ன? ”ஏமனில் மரணதண்டனையில் சிக்கிய நிமிசாவை காபாற்றுங்கள்”

Kerala Nimisha Priya: ஏமன் நாட்டில், மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிசாவை காப்பாற்றுங்கள் என்று சமூக வலைதளங்களில் #SaveNimisha என்ற ஹேஷ்டாக் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிமிசா பிரியாவுக்கு, கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளட் மணி கொடுத்தால் தண்டனையை ரத்து செய்யப்படும் என கூறப்படும் நிலையில், பிளட் மணி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 

ஏமனில் நிமிசா பிரியா:

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிமிசா பிரியா , கடந்த 2008 ஆம் ஆம் ஆண்டு ஏமன் நாட்டில் செவிலியராக பணி புரிய சென்றார். அங்கு , தலால் அப்தோ மஹ்தி என்ற நபருடன் கிளினிக் ஆரம்பிக்கிறார். ஆனால், தலால் அப்தோ மஹ்தி என்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த நபர் நிமிசாவை ஏமாற்றி, மருத்துவமனையின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறார். 

மேலும் , நிமிசா பிரியா பலரிடம் கடன் வாங்கி மருத்துவ கிளினிக்கை ஆரம்பிக்க பங்களித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சில காலங்களுக்கு பிறகு நிமிசாவுக்கு உடல் ரீதியாக தாக்குதலையும், மனரீதியாக தாக்குதலையும் தாமஸ் கொடுத்து வந்துள்ளார். மேலும், துப்பாக்கி காட்டி மிரட்டி, மருத்துவமனை முழுவதும் அபகரிக்க முயற்சி செய்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 

உயிரிழந்த தலால்:

இதனால் கொடுமைகள் தாங்க முடியாத நிமிசா பிரியா, காவல்துறையில் புகார் கொடுத்தார். ஆனால், தலால் போலியான திருமண புகைப்படங்களை, இவர் நிமிசா தனது மனைவி என்றும், இது எனது சொத்தும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் நிமிசாவுக்கு 1 வார கால சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது. சிறையில் இருந்தபோது, அங்கிருந்த காவலர் ஒருவர், நிமிசாவின் நிலையறிந்து, எப்படியாவது நாட்டை விட்டு தப்பித்துச் சென்றுவிடு, தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு , தெரியாமல் சென்றுவிடு கூறியிருக்கிறார். 

Nimisha Priya:பிளட் மணி என்றால் என்ன? ”ஏமனில் மரணதண்டனையில் சிக்கிய நிமிசாவை காபாற்றுங்கள்”

படம் : தலால் அப்தோ மஹ்தி

மரண தண்டனை:

ஆனால், மயக்க மருந்தின், வீரியம் ( Doss ) அதிகமாக , தலால் இறந்துவிடுகிறார். இதையடுத்து, செய்வதறியாது திகைத்த நிமிசா தப்பித்துச் செல்லும் போது கைது செய்யப்படுகிறார். 
அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்குகிறது. அப்போது, நிமிசா வேண்டும் என்றே கொலை செய்யவில்லை என அறிந்த நீதிபதி, தியா என்கிற சட்டத்தை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கிறார். 

பிளட் மணி ( BLOOD MONEY )

தியா சட்டம் என்றால் இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, வேண்டும் என்றே குற்றம் புரியாதவர்களுக்கு, தண்டனைக்கு பதிலாக, அதற்கு ஈடாக பணம் கொடுக்க வேண்டும் என்பதாகும். அதற்கு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் ஒத்துழைப்பு கட்டாயமாகும். இந்த சட்டம் ஏமன் உள்ளிட்ட  சில இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. 

இந்நிலையில், மரண தண்டனை குறித்தான தீர்ப்பை அதிபரும் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் உறுதிபடுத்திவிட்டார். இதனால், ஜனவரி மாதத்திற்குள் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், பலரும் ஏமனில் சிக்கியிருக்கும் நிமிசாவை காப்பாற்றுமாறு #SaveNimishaPriya என்ற ஹேஸ்டேக்கை வைரலாகி வருகின்றன. 

இந்திய அரசு:

இதுகுறித்து இந்திய அரசு தெரிவித்ததாவது , “ இந்த விவகாரத்தை கவனித்து வருவதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 
இந்தியாவுக்கு, ஏமனில் தூதரகமும் இல்லை; ஏமனில் அரசியல் நிலையற்றத்தன்மை மற்றும் கிளர்ச்சியாளர்கள் சண்டை என ஏமன் அரசியல் சிக்கலும் நிலவுவதால், நிமிசாவை மீட்பதில் , பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கலும்  இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன, 
இந்நிலையில், நிமிசாவை காப்பாற்ற , இந்திய அரசு என்ன நடவடிக்கை போகிறது, அடுத்த கட்ட நகர்வு மிகப்பெரிய கேள்வியாகவும் , கவலை அளிப்பதாகவும் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். 

இந்த செய்தி குறித்தும்; என்ன நடந்தது என்பதும் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள இந்த செய்தி லிங்க்கை கிளிக் செய்யவும்.

Also Read: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget