மேலும் அறிய

Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

Yemen Nimisha Priya: கேரள செவிலியர் நிமிசா பிரியாவுக்கு ஏமன் நாட்டில், கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

நிமிசா பிரியாவை காப்பாற்றுமாறு #SaveNimishapriya என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர், ஏமனில் ஒருவரை கொலை செய்தாரா, எதற்காக அவரைக் காப்பாற்ற வேண்டும் என இந்தியர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர், இந்திய அரசுக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன என்று பார்ப்போம். 

ஏமன் நாடு:

ஏமன் நாடானது வடக்கே சவுதி அரேபியா, வடகிழக்கில் ஓமன், மேற்கில் செங்கடல் மற்றும் தெற்கே அரபிக் பெருங்கடலை எல்லைகளாக கொண்டுள்ளது. இங்குதான் நிமிசா பிரியா செவிலிரியாக பணி புரிந்திருக்கிறார். இங்கு, கிளர்ச்சிகளும், கலவரங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களை தாயகம் திரும்ப சொல்லிவிட்டது, இந்திய அரசு. இந்தியாவுக்கான தூதரகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

யார்,இந்த நிமிசா பிரியா.?

நிமிசா பிரியா, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் . இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருக்கிறார். இவரது பெற்றோர்கள் தினக்கூலி வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. செவிலியருக்கான படிப்பை முடித்த நிமிசா பிரியாவுக்கு, ஏமன் நாட்டு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து 2008 ஆம் ஆண்டு ஏமன் நாட்டுக்குச் சென்று பணி புரிகிறார். அவருடைய பணி நன்றாக போயிருக்கிறது. இவரது ஊதியத்தால், குடும்பமும் முன்னேற்றம் அடைந்து வந்திருக்கிறது.

Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

இதனை தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு கேரளா திரும்பிய நிமிசா பிரியாவுக்கு, அங்கு தாமஸ் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. பின்னர், கணவருடன் நிமிசா பிரியா ஏமன் நாட்டிற்குச் செவிலியராக பணிபுரிய திரும்பி விடுகிறார். அங்கு, அவரது கணவர் எலக்ட்ரீசியன் உதவியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.  அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. இதையடுத்து, தாமசுக்கு சரிவர வேலை இல்லாத காரணத்தால் சொந்த ஊரில் வேலை பார்க்கலாம் என தாமசும் , அவரது குழந்தையும் கேரளம் திரும்பி விட்டனர்.

ஏமனில் புதிய மருத்துவமனை:

இவர்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கையில், நிமிசாவுக்கு ஒரு யோசனை வருகிறது; அதுதான் , அவருக்கு சிக்கலாக மாறிவிட்டது. ஏமனில் ஒரு சிறிய மருத்துவமனை ஆரம்பிக்கலாம் என்றும்; இதையடுத்து தனது கணவரையும் குழந்தையையும் திரும்ப அழைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. 

ஆனால், ஏமன் சட்டப்படி அயல்நாட்டவர் சொந்தமாக மருத்துவமனை தொடங்க முடியாது, வேண்டுமென்றால் உள்நாட்டினவரின் முதலீட்டுடன் கொண்டு தொடங்கலாம். அப்போது, தற்போதைய வேலை பார்க்கும் மருத்துவமனையில் , பிரசவத்திகாக வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரது கணவர் தலால் அப்தோ மஹ்தி என்பவர், மருத்துவமனை ஆரம்பிக்க முதலீடு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார். இருவரும் இணைந்து சிறிய மருத்துவமனையை ஆரம்பிக்கின்றனர்.

துன்புறுத்தலுக்கு ஆளான நிமிசா:

இதையடுத்து, 2015 ஆண்டு ஏமனில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுகிறது. அப்போது, இந்தியர்களை திரும்பிவர இந்திய அரசு உத்தரவிட பலர் திரும்பிவிட்டனர்.மேலும், இந்தியர் யாரும் ஏமனுக்கு போக கூடாது எனவும் உத்தரவும் பிறப்பித்தது. 
ஆனால், நிமிசா பிரியா இந்தியா திரும்பவில்லை; ஏனென்றால் மருத்துவமனை தொடங்க முதலீடு செய்தாகிவிட்டது என்பதால். ஆனால், நிமிசாவை ஏமாற்ற ஆரம்பித்திருக்கிறார் தலால் . ஒரு கட்டத்தில், நிமிசாவை தாக்குவதும், துப்பாக்கி கொண்டு மிரட்டவும் ஆரம்பித்திருக்கிறார். 

இதனால்,பொறுமையிழந்த நிமிசா காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். மேலும்,  நிமிசா தனது மனைவி என்றும், போலியாக திருமண புகைப்படத்தை உருவாக்கி, இது எனது சொத்துதான் என காவல் நிலையத்தில் தலால் கூறியிருக்கிறார். இதனால் , நிமிசாவுக்கு 6 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 

Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

படம்: தலால் அப்தோ மஹ்தி

மரண தண்டனை:

அப்போது, நிமிசாவின் நிலைமை அறிந்த காவலர் ஒருவர், தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு தப்பித்து ஓடிவிடுமாறு கூற, அவரும் மயக்க மருந்து கொடுத்திருக்கிறார். ஆனால் , மயக்க மருந்து வீரியம் அதிகமாக , தலால் இறந்துவிடுகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த, அங்கிருந்த ஹுனான் என்கிற தோழியிடம் கூற, உடலை அகற்றிவிட்டு நாட்டை விட்டு தப்பித்து ஓடிவிடு என அறிவுரை கூற, இருவரும் அவரது உடலை ஒரு நீர்த்தேக்கத்தில் உடலை போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து, சவுதி வழியாக தப்பித்துச் செல்லும் போது, எல்லையில் கைது செய்யப்படுகிறார் நிமிசா. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது. அப்போது, நீதிபதிக்கும் நடந்தது என்ன நடந்தது தெரிகிறது, அதனால் ஏமனில் ஒரு சட்டம் இருக்கிறது; தியா என்கிற சட்டம் ; 

தியா சட்டப்படி, குற்றவாளி வேண்டும் என்றே குற்றம் செய்யவில்லை என்று  கருதினால், பிளட் மணி கொடுத்தால் தண்டனையில் இருந்து விடுபடலாம். பிளட் மணி ( Blood Money ) என்றால் பணம் கொடுத்தால் தண்டனையை திரும்ப பெற்று கொள்ளப்படும்; அதுவும் ,பாதிக்கப்பட்ட குடும்பத்தின் ஒப்புதலும் இருக்க வேண்டும். 

ஏமன் வந்த நிசாவின் தாய்

இதையடுத்து, இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பிக்க, கேரளாவில் பல தொண்டுக்கள் மூலம் பணம் திரட்டப்படுகிறது. இந்திய அரசின் நிபந்தனை அடிப்படையிலான ஒப்புதலுடன் நிமிசாவின் தாயார், ஏமன் செல்கிறார். அங்கு வழக்கறிஞர் ஒருவரை அணுகுகிறார். அப்போது, எனக்கு 40,000 டாலர்( ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 35 லட்சம் ) தர வேண்டும் என்றும் தண்டனையை திரும்ப பெற பிளட் மணியாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3.5 கோடி தரவேண்டும் என வழக்கறிஞர் கூறுகிறார்.  நிமிசா தாயாரும் பணம் தருவதற்காக ஏற்றுக் கொள்கிறார். ஆனால், அந்த வழக்கறிஞர் , கட்டணம் பெற்றுக்கொண்டு , அடுத்தகட்டமாக எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஏமான் அதிபருக்கான அதிகாரங்கள் ( Pardoning Power ) அடிப்படையில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், கடந்த வருடம் ( 2024 ) டிசம்பர் 30 ஆம் தேதி மரண தண்டனையை உறுதி செய்துள்ளார். இந்நிலையில், அவருகான மரண தண்டனையானது ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்த ஜனவரி மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று.

இந்திய அரசு:

இந்நிலையில், “ பலரும் நிமிசாவை காப்பாற்றுமாறு அரசிடம் கோரிக்கை வைத்த வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாவது, “ இந்த விவகாரத்தை அறிந்திருப்பதாகவும், இதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் , இந்த விவகாரத்தில், வாய்ப்பிருக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் பிளட் மணி என கூறப்படும் தேவையான பணத்தை அளிக்க, நிமிசா தரப்பு தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு, ஏமனில் தூதரகம் கிடையாது, அண்டை நாடான சவுதியில் இருந்துதான், இந்த விவகாரத்தை கையாண்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. 

Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

”நிமிசாவை காப்பாற்றுங்கள் “

மேலும், ஏமனில் கிளர்ச்சி உள்ளிட்டவைகள் ஏற்படுவதால், அரசின் நிலையற்றத்தன்மையும் இருக்கிறது. 
இந்த தருணத்தில், ” நிமிசா குற்றம் செய்திருந்தாலும் வேண்டுமென்றே கொலை செய்யவில்லை என்றும் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செய்ய நினைத்தது, மரணத்தில் சென்றுவிட்டது என்றும்,  நிமிசாவை காப்பாற்ற வேண்டும் என்று இந்தியர்கள் பலரும் கோரிக்கைகள் வைத்து வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget