"இதெல்லாம் ரொம்ப கொடுமை" வரதட்சணையால் பறி போன இளம்பெண் உயிர்.. கொதித்த கோர்ட்!
உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்த பெண் வழக்கில் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொலை செய்ததற்காக அவரது கணவருக்கும் கணவரின் சகோதரிக்கும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நீதிமன்றம், ஆயுள் தண்டனையும், தலா ரூ.35,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
வரதட்சணை கேட்டு கொடுமை:
இந்தியாவில் வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று இருக்கும் போதிலும், வரதட்சணை கேட்பதும் அது சார்ந்த மரணங்களுக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் கூட, நமது அண்டை மாநிலமான கேரளாவில் 26 வயதான இளம்பெண் மருத்துவர் வரதட்சணை கொடுமையால் தற்காலை செய்து கொண்டது நாட்டையே உலுக்கியது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்த பெண் வழக்கில் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொலை செய்ததற்காக அவரது கணவருக்கும் கணவரின் சகோதரிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் அரசு வழக்கறிஞர் சர்வீஸ்வர் மணி திரிபாதி கூறுகையில், "2018 ஆம் ஆண்டு, தேஜம் தேவியை கொன்ற வழக்கில் அங்கத் யாதவ் (32) மற்றும் அவரது சகோதரி ரேணு தேவி ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு:
தேஜம் தேவியின் தந்தை வாரிஸ்டர் யாதவ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை கேட்டு அங்கத் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.
கோதிபார் பகுதியில் உள்ள பஸ்தேலா கிராமத்தில் 2013 ஆம் ஆண்டு, அங்கத்தை தேஜம் தேவி திருமணம் செய்து கொண்டார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 498A (பெண்ணைக் கொடுமைப்படுத்துதல்), 304B (வரதட்சணை மரணம்), 302 (கொலை), 323 (காயப்படுத்துதல்), வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழும் FIR பதிவு செய்யப்பட்டது.
விசாரணையைத் தொடர்ந்து, தேஜமின் மரணத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட இருவரும் காரணம் என்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பவன் குமார் ஸ்ரீவஸ்தவா முடிவு செய்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார்" என்றார்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

