அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு: 16 கேமராக்கள் கொண்டு வீடியோ பதிவு!
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு வருபவர்களை 16 கேமராக்கள் கொண்டு வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 19 வகையான சைவ உணவு வகைகளை தயார் செய்யும் பணியில் திண்டிவனத்தில் இருந்து வருகை தந்துள்ள 300-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்திற்கு வருபவர்களை 16 கேமராக்கள் கொண்டு வீடியோ பதிவு
பொதுக்குழு கூட்டத்திற்கு வருபவர்களை 16 கேமராக்கள் கொண்டு வீடியோ பதிவு செய்யப்படுகிறது, பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கபடுகிறது, வருகை பதிவு மற்றும் கட்சியினர் வருகையை வீடியோ எடுக்கப்பட்டு வருகிறது. 16 கேமராக்கள் கொண்டு வீடியோக்கள் பதிவு செய்யப்படுகிறது.
பொதுக்குழுவுக்கு தடை கோரிய மருத்துவர் ராமதாஸ் தரப்பு
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கட்சியின் பொதுக்குழுவை இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரத்தில் கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் டாக்டர் ராமதாஸ் தரப்பில், முரளிசங்கர் மனு தாக்கல் செய்தார்.
அதில், பா.ம.க., வின் தலைவராக இருந்த அன்புமணியின் பதவி காலம் கடந்த மே மாதத்துடன் காலாவதியாகி விட்டது. அவருக்கு பொதுக்குழுவை கூட்ட எந்த அதிகாரமும் இல்லை. கட்சியின் நிறுவனத் தலைவரிடம் முறையான அனுமதி பெறாமல் கூட்டப்படும் இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. டாக்டர் ராமதாசையும், அன்புமணியையும் நேரில் ஆஜர் ஆகா உத்தரவிட்டார், இந்த நிலையில் அன்புமணி நேரில் ஆஜரானார், உடல்நிலை காரணமாக டாக்டர் ராமதாஸ் காணொளி காட்சி முலமாக ஆஜர் ஆனார். தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
பிரமண்டமாக நடக்கும் பாமக பொதுக்குழு
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாககள் வருகை தந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு 19 வகையான சைவ உணவு வகைகளை தயார் செய்யும் பணியில் திண்டிவனத்தில் இருந்து வருகை தந்துள்ள 300-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவு வகைகள்:
இனிப்பு கோவா கேக், ட்ரை குலோப் ஜாமுன், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, நேஷ்னல் பொறியல், கருணை சாப்ஸ், காலிப்ளவர் 65, அவியல், உருளை சிப்ஸ், அப்பளம், மாங்காய் ஊறுகாய், வடை மற்றும் பாயாசம்




















