படுக்கை அறைக்குள் இருந்த இளைஞர்! வசமாக சிக்கிய மத்திய அமைச்சரின் பேத்தி! கணவர் செய்த வெறிச்செயல்!
இறந்தவர் கயா மாவட்டத்தில் உள்ள டெட்டுவா கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பீகாரில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் பேத்தி, திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதன் காரணமாக கணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் கயா மாவட்டத்தில் உள்ள டெட்டுவா கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுஷ்மாவின் கணவர் ரமேஷ், ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அவர் பணி முடித்து இரவு வீட்டிற்கு வந்தபோது சுஷ்மாவின் அறையில் ஒரு இளைஞரைப் பார்த்துள்ளார் ரமேஷ். இதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. சுஷ்மா, ரமேஷை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அவர் மனம் மாறவில்லை.
இதையடுத்து சில நிமிடங்களுக்குப் பிறகு, ரமேஷ் ஒரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்து, சுஷ்மாவை நோக்கி ஒரு தூரத்திலிருந்து சுட்டார். துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்குப் பிறகு அவர் மயக்கமடைந்தார்.
இதையடுத்து கயாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ரமேஷ் ஆயுதத்தை அறையில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சுஷ்மாவின் சகோதரி பூனம் கூறுகையில், ”ரமேஷ் பாட்னாவிலிருந்து மதியம் 12 மணியளவில் வீடு திரும்பினார். நானும் என் சகோதரியின் குழந்தைகளும் ஒரு தனி அறையில் இருந்தோம். ஏதோ ஒரு பிரச்சினைக்காக கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. சண்டையின் போது, ரமேஷ் ஒரு துப்பாக்கியை எடுத்து என் சகோதரியை நோக்கி சுட்டார்," எனத் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் சுஷ்மாவின் அறைக்கு சென்றேன். என் சகோதரி இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் காயங்களால் உயிரிழந்தார். குற்றவாளியிடமிருந்து தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவரைக் கைது செய்ய போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பீகார் மகாதலித் விகாஸ் மிஷனின் கீழ் வளர்ச்சி முயற்சிகளுக்காக மாநில அரசுக்கும் சமூகத்திற்கும் இடையே இணைப்பாகப் பணியாற்றும் ஒரு தனிநபரான விகாஸ் மித்ராவாக சுஷ்மா பணியாற்றினார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரிக்க தடயவியல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
சுஷ்மாவும் ரமேஷும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.
இதற்கிடையில், மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவது குறித்து முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக சாடினார். "பீகாரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது" என்று அவர் குற்றம் சாட்டினார்.

