IND vs ENG: கலக்கிய சிராஜ்-பிரசித்...டென்ஷன் டென்ஷன்... ஓவல் டெஸ்டில் இந்தியா த்ரில் வெற்றி
India vs England Test: சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் அபார பந்து வீச்சால் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என சமன் செய்தது.
ஓவல் டெஸ்ட்:
இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் கடைசி டெஸ்ட் போட்டியில். இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களையும், இங்கிலாந்து 247 ரன்களையும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்களை இந்தியா அணி எடுத்தது. இதனால் இங்கிலாந்திற்கு 374 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
374 ரன்கள் டார்கெட்:
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. இதையடுத்து, நேற்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்தில் போப்-டக்கெட் அதிரடியாக ஆடினர். சிறப்பாக ஆடிய டக்கெட் அரைசதம் விளாசினார். 83 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த தொடர் முழுவதும் சொதப்பி வந்த ஒல்லி போப் பந்துகளில் 5 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொல்லை கொடுத்த புரூக்:
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடினார், 106 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை இருவரும் இணைந்து வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். ஜோ ரூட் சற்று நிதானமாக ஆட ஹாரி ப்ரூக் அடித்து ஆடினார்.
ஆகாஷ்தீப், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் மாறி, மாறி வீசியும் இந்த ஜோடியை கட்டுப்படுத்த இந்திய பவுலர்களால் மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்ததால் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருந்தது. அபாரமாக ஆடிய இருவரும் சதம் விளாசினார். இதனால் இங்கிலாந்து பக்கமே வெற்றி என்று அனைவரும் நினைத்தனர்.
திருப்பம் தந்த ஆகாஷ் தீப்:
முக்கியமான கட்டத்தில் அதிரடி காட்டிய ஹாரி ப்ரூக் ஆகாஷ் தீப் பந்தில் அவுட்டானார். அவர் 98 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்ஸருடன் 111 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த ஜேக்கப் பெத்தேல் ரன் எடுக்கத் தடுமாற அவர் 5 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் போல்டானார். மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக ஆடி வந்த முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தனது 39வது சதத்தை விளாசினார். அவர் 105 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டாக 337 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது மழை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நேற்று முடித்துக் கொள்ளப்பட்டது.
சிராஜ் அபாரம்:
இங்கிலாந்து அணியிடன் 4 விக்கெட்டுகள் இருந்த நிலயில் இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ஜேமி ஸ்மித் சிராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அடுத்த ஓவரில் ஜேமி ஓவர்டனின் விக்கெட்டை சிராஜ் எடுக்க ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. ஆனால் அட்கின்சன் சிக்சர் அடித்து நம்பிக்கை அளிக்க ஜோஷ் டங்க் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார்.
தோள்பட்டையில் இறக்கம் காரணமாக பந்துவீசாமல் இருந்த கிறிஸ் வோக்ஸ் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கினார். முக்கிய கட்டத்தில் ஆகாஷ் தீப் கேட்ச் விட மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் முகமது சிராஜ் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றியை இந்தியாவுக்கு தேடிக்கொடுத்தார்.
ONE OF THE GREATEST VICTORY INDIAN TEST HISTORY - THIS IS SHUBMAN GILL ERA. 🇮🇳 pic.twitter.com/JkEjGMdVeq
— Johns. (@CricCrazyJohns) August 4, 2025
இது மட்டுமில்லாமல் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெற்ற போட்டியாக இது அமைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என சமன் செய்தது.





















