Morning Headlines: நாளை 4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. கேரள கோயில்களில் அரளிப்பூவுக்கு தடை.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines May 12: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- நாளை 4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. 96 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு..
மக்களவை தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவானது ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் முதல் கட்டமான ஏப்ரல் 19 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து விட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும், 3ஆம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மேலும் படிக்க..
- இந்து கடவுளை அவமதித்தார்களா காங்கிரஸ் தொண்டர்கள்? பா.ஜ.க.வினர் வைரலாக்கும் வீடியோ உண்மையானதா?
பா.ஜ.க. பெண் தலைவரை மத்திய பிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் ஜிது பத்வாரி விமர்சித்ததற்கு எதிராக அவரின் வீட்டின் வெளியே பா.ஜ.க. மகளிர் அணியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்து மத கடவுள்களின் போஸ்டர்களை காங்கிரஸ் தொண்டர்கள் கிழித்தது போன்று இந்த தகவல் பரப்பப்பட்டது. வரும் 13ஆம் தேதி நடக்கும் நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸ் கட்சியை இந்துக்களுக்கு எதிரான கட்சி என பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேர்தல் பரப்புரைகளில் விமர்சித்து வருகின்றனர். மேலும் படிக்க..
- கேரள கோயில்களில் அரளிப்பூவுக்கு தடை; அரளி இலையை உட்கொண்ட பெண் உயிரிழப்பு; என்ன நடந்தது?
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் அரளி இலைகளை உட்கொண்ட பெண் இறந்ததையடுத்து, கோயில்களில் அரளி பூவைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்செயலாக அரளி பூ ( ஓலியாண்டரை ) உட்கொண்டதால், பெண் இறந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு பூவைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, கேரளாவைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற பெண்ணுக்கு இங்கிலாந்தில் செவிலியராக பணி புரிவதற்கு வேலை கிடைத்தது. இந்நிலையில், இவர் 10 நாளைக்கு முன்பு கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றபோது, வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். மேலும் படிக்க..
- தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பான தகவல்களை தாமதமாக வெளியிடுவது பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது. பொதுவாக, தேர்தலில் பதிவாகும் வாக்குகள் தொடர்பான விவரங்கள் அடுத்த நாள் காலையில் வெளியிடப்பட்டுவிடும். ஆனால், இந்த முறை நான்கு நாள்கள், ஐந்து நாள்கள் கழித்து வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பும் விதமாக உள்ளது. மேலும் படிக்க..