மேலும் அறிய

Neeraj Chopra Himani: வாவ்! தங்கமகன் நீரஜ் சோப்ராவின் செல்ல மனைவி ஹிமானிக்கு இப்படி ஒரு பின்னணியா?

Neeraj Chopra Himani Marriage: ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவின் மனைவி ஹிமானி கல்லூரி மாணவி, விளையாட்டு வீராங்கனை என பன்முகம் கொண்டவர்.

உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதல் பிரிவில் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வாங்கி பெருமை பெற்றுத் தந்தவர். இவரது திருமண புகைப்படம் நேற்று வெளியானது. திடீரென நீரஜ் சோப்ரா மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நீரஜ் சோப்ரா மனைவி யார்?

நீரஜ் சோப்ரா ஹிமானி மோர் என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். ஹிமானி மோருக்கு தற்போது 25 வயதாகிறது. அவர் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட்டைச் சேர்ந்தவர். ஹிமானி சோனிபட்டில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

பள்ளி காலத்திலே படிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார். நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் வீரராக இருப்பது போல, ஹிமானி டென்னிஸ் வீராங்கனை ஆவார். தற்போது விளையாட்டு மேலாண்மைப் படிப்பை அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையரில் உள்ள ஃப்ராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். முன்னதாக பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, டெல்லியில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியல் மற்றும் உடற்கல்வி பிரிவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 

டென்னிஸ் வீராங்கனை:

சிறு வயது முதலே டென்னிஸ் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் ஹிமானி பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தேசிய அளவில் பல டென்னிஸ் போட்டிகளில் ஆடியுள்ள ஹிமானி இந்திய டென்னிஸ் தரவரிசையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 42வது இடத்திலும், இரட்டையர் பிரிவில் 27வது இடத்திலும் உள்ளார். 

ஹரியானா மாநிலத்தின் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான ஹிமானி இந்திய அளவில் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுக்கான இரட்டையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் 30வது இடத்திற்குள் 14 வாரங்களுக்கு மேல் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார். மேலும், அமெரிக்காவின் மசாசெட்ஸில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் டென்னிஸ் உதவி பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். 

பன்முகத் திறன் கொண்ட ஹிமானி நீரஜ் சோப்ராவைத் திருமணம் செய்து கொண்டதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும், கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளியும் வென்றிருந்தார். மேலும், ஈட்டி எறிதலுக்கான பல பிரபலமான தொடர்களில் வெற்றி பெற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதுதவிர, இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் அபினவ் பிந்த்ராவிற்கு பிறகு தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget