மேலும் அறிய
Mahakumbh 2025: மகா கும்பமேளா - முதல் நாள் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
Kumbh Mela 2025: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா புகைப்படங்கள் பற்றி காணலாம்.
மகா கும்பமேளா 2025
1/5

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறும். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலரும் பங்கேற்று நீராடுவர்.
2/5

ஜன.13ஆம் தேதியான இன்று தொடங்கியது. பிப். 26ஆம் தேதி வரை அதாவது அடுத்த 45 நாள்களுக்கு இந்த மகா கும்பமேளா விழா நடைபெறுகிறது.ரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான (விடுதலை) பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.மாகி பூர்ணிமா மற்றும் பிப்ரவரி 26 அன்று மஹா சிவராத்திரி (இறுதி ஸ்னான்) நீராடல்கள் கடைபிடிக்கப்படுகிறது.
3/5

கும்பமேளா நான்கு நகரங்களில் நடைபெறுகிறது, ஆனால் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் மட்டுமே நிரந்தரமாக நடைபெறுகிறது.. முதல் நாலில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர் என்று சொல்லப்படுகிறது. வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் இந்த நிகழ்விற்கு வருகிறார்கள்.
4/5

ஒவ்வொரு முறை இந்த விழா நடைபெறும்போது பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இம்முறை 50 கோடி பக்தர்கள் வருகை புரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 7,000 கோடி தொகையில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5/5

மகா கும்பமேளாவால் ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு மாநிலத்தில் வர்த்தகம் நடைபெறும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published at : 13 Jan 2025 09:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















