Neeraj Chopra Marriage: ஒலிம்பிக் நாயகன், சத்தமே இல்லாமல் முடிந்த நீரஜ் சோப்ராவின் திருமணம் - யார் இந்த ஹிமானி?
Neeraj Chopra Marriage: இந்தியாவிற்காக இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற, நிராஜ் சோப்ராவின் திருமணம் மிக எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.

Neeraj Chopra Marriage: நீரஜ் சோப்ராவின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நீரஜ் சோப்ரா திருமணம்:
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர், நீரஜ் சோப்ராவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு விளையாட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, ஹிமானி எனும் பெண்ணுடன் தனக்கு திருமணம் நடந்தது முடிந்தது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவின் திருமணம் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை அன்று மிக எளிமையான முறையில் நடந்தேறியுள்ளது.
View this post on Instagram
ஹிமானியுடனான தனது திருமணத்தை அறிவிக்கும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி. அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சியாக எப்போதும்" என்று நீரஜ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த ஹிமானி?
இதுவரை, ஹிமானி (நீரஜ் சோப்ராவின் மனைவி) பற்றி எந்த உறுதியான தகவலும் இல்லை. ஆனால் நிரஜ் சோப்ராவின் திருமணம் செய்து கொள்வதற்கான எந்த தகவலும் அல்லது வதந்தியும் இல்லாமல்ல், அவரது திருமணம் பற்றி வெளியாகியுள்ள திடீர் செய்தி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஹிமானி தற்போது அமெரிக்காவில் படித்து வருவதாகவும், அவர்களுக்கான வரவேற்பு விழா விரைவில் பிரமாண்டமாக நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், மிகவும் எளிமையாக நீரஜ் சோப்ராவின் திருமணம் நடந்துள்ளது.
நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற சில மாதங்களுக்குப் பிறகு, அவரது திருமண செய்தி வெளியாகியுள்ளது. 2021ல், ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் நீரஜ். தொடர்ந்து, பாரிஸ் oலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

