மேலும் அறிய

Lok Sabha Phase 4 Polling: நாளை 4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. 96 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு..

இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவானது ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவானது ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் முதல் கட்டமான ஏப்ரல் 19 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து விட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும், 3ஆம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 

இதனிடையே  10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதொல் ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் 4 தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி என 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

4 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தலில் மொத்தம் 1, 717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு என்பது மிகத்தீவிரமாக நடந்தது. பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா ஆகிய கட்சிகள் இரவு, பகல் பாராமல் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தது. நேற்றுடன் பரப்புரை ஓய்ந்த நிலையில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த 4 ஆம் கட்ட வாக்குப்பதிவோடு ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 66.14 %,  இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71%, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 65.68 % பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்த 4 ஆம் கட்ட வாக்குப்பதிவில் ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் களம் காண்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரிலும், மத்திய அமைச்சரான அர்ஜுன் முண்டா ஜார்கண்டில் போட்டியிடுகிறார். அதுமட்டுமல்லாமல் அசாதுதீன் ஓவைசி மற்றும் மத்திய அமைச்சரான கிஷன் ரெட்டி ஆகியோர் தெலங்கானாவில் போட்டியிடுகின்றனர்.

நடிகர் சத்ருகன் சின்ஹா  மேற்குவங்கத்தில் களம் காண்கிறார். இப்படி நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 96 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget