டிரம்ப் விழா: அழைக்கப்பட்ட 100 பேரில் 2 இந்தியர்கள், ஒன்று அம்பானி, மற்றொன்று..
Trump-Mukesh Ambani: அமெரிக்க அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானி நேரில் பங்கேற்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் விழாவில் முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானி ஆகியோர் ஒரு நாள் முன்னதாக டொனால்ட் டிரம்பை சந்தித்து அவரது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது அதிபராக நாளை, திங்கள்கிழமை (ஜனவரி 20) இரண்டாவது முறையாக பதவியேற்கிறார்.
டிரம்ப் ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவியேற்பு விழாவை அறிவிக்கும் வகையில் இன்று மாலை டிரம்புடன் ஒரு நெருக்கமான 'மெழுகுவர்த்தி இரவு விருந்தில்' கலந்து கொள்ள 100 பேர் அழைக்கப்பட்டனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நிதா அம்பானி ஆகியோர் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த 100 பேரில் இந்தியாவைச் சேர்ந்த அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா ஆகிய இருவர் மட்டுமே என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானி ஆகிய இருவரும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக, டொனால்ட் டிரம்பை சந்தித்து அவரது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
#WATCH | US: At the Private Reception in Washington, Reliance Industries Chairman Mukesh Ambani & Founder & Chairperson of Reliance Foundation, Nita Ambani congratulated President-elect Donald Trump ahead of his swearing-in ceremony
— ANI (@ANI) January 19, 2025
The swearing-in ceremony of President-elect… pic.twitter.com/rWIpw19ou4
உலகின் மூன்று பெரிய பணக்காரர்களான - தொழில்நுட்ப தொழிலதிபர் மற்றும் டிரம்பின் ஆதரவாளரான எலோன் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக் மற்றும் பேஸ்புக்கின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?





















