Chennai Weather: சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Weather Updates: சென்னையில் இன்று காலை மழை பெய்த நிலையில், நாளைய வானிலை நிலவரம் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வோம்.

சென்னையில் சில நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடனும் இரவு மற்றும் காலை வேளைகளில் குளிரும் நிலவி வந்த நிலையில், இன்று காலை மழையானது சற்று அதிகமாகவே பெய்தது. இதனால், சாலைகளில் பள்ளமான சில பகுதிகளில் மழை நீரும் தேங்கி நின்றது.
சென்னை நாளைய வானிலை நிலவரம்:
இந்நிலையில் சென்னையில் இன்று (19-01-2025) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும், நாளை (20-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஓட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
தமிழ்நாட்டில் வானிலை நிலவரம்:
தமிழ்நாட்டில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
மேலும், கன்னியாகுமரி தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய வானிலை
20-01-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
21-01-2025 முதல் 23-01-2025:
வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-01-2025 மற்றும் 25-01-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Also Read: Ceasefire: விடியலை பார்க்கவுள்ள மக்கள்! இஸ்ரேல் - ஹமால் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

