Morning Headlines: ராகுல் காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைப்பு; அடுத்தக்கட்டத்தை நோக்கி சந்திரயான் 3... முக்கிய செய்திகள் இதோ!
Morning Headlines August 5: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம்.
- Chandrayaan 3: இன்னும் கொஞ்ச தூரம் தான்.. முக்கியமான காலகட்டம்: அடுத்தக்கட்டத்தை நோக்கி சந்திரயான் 3..
சந்திராயன் 3 விண்கலம் பூமியிலிருந்து நிலவுக்கு செல்லும் தூரத்தில் மூன்றில் இரண்டு பங்கு கடந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
- Hyderabad: ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்த ஹைதராபாத்..கோடிக்கணக்கில் ஏலம் கேட்கப்பட்ட மனைகள்
பெங்களூருக்கு அடித்தபடியாக நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை தலைநகராக திகழ்வது ஹைதராபாத். தெலங்கானா தலைநகரான ஹைதராபாத் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், ஹைதராபாத் கோகபேட்டில் உள்ள 45 ஏக்கர் நிலங்களை ஏலத்தில் விட்டு 3,300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையம். உலகின் தலைசிறந்த பன்னாட்டு நிறுவனங்கள், கோகபேட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில்தான் அமைந்துள்ளது. மேலும் படிக்க
- Rahul Gandhi Explainer: இனி, ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியுமா? வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலா? அடுத்து என்ன?
மோடி குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கியதற்கான காரணத்தை விசாரணை நீதிபதி சொல்லவில்லை எனக் கூறி, இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில், கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- Rahul Gandhi Case: இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.. எம்.பியாக தொடர்கிறார் ராகுல் காந்தி
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழமை நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தீர்ப்பை அளித்த பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு “விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவின் விளைவுகள் அதிகபட்சமாக உள்ளது. மேலும் படிக்க
- Defamation Case: 162 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்று தண்டனை வழங்கியதில்லை..ராகுல் காந்தி வழக்கில் சிதம்பரம் கருத்து
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, உச்சநீதிமன்றம் பரபர உத்தரவு பிறப்பித்துள்ளது. கீழமை நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். "பாஜக ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். இந்தியக் குற்றவியல் சட்டம் 162 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் இதுவரை வாய்மொழி அவதூறுக்காக எந்தவொரு நபருக்காவது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதா? மேலும் படிக்க