IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
IND Vs AUS 5th Test: இந்தியாவிற்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில், 39 ரன்களை சேர்ப்பதற்குள் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்தது.
பும்ரா, சிராஜ் அபாரம்:
சிட்னியில் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், பேட்ஸ்மேன்கள் பெரிதும் சோபிக்காததால், இந்திய அணி முதல் நாளிலேயே 185 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்களை சேர்த்து இருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் அந்த அணிக்கு கடும் நெருக்கடி அளித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்:
அதன்படி, இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் லபுசக்னே 2 ரன்கள் மட்டும் சேர்த்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 23 ரன்கள் எடுத்த இருந்த நிலையில் கோன்ஸ்டாஸும், 4 ரன்கள் எடுத்து இருந்தபோது ட்ராவிஸ் ஹெட்டும் அடுத்தடுத்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால், 39 ரன்களை சேர்ப்பதற்குள் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைதொடர்ந்து 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலியா ஆல்-அவுட்:
வெப்ஸ்டர் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 57 ரன்கள் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 181 ரன்களுக்கே அந்த அணி ஆல்-அவுட்டானது. இந்திய அணி சார்பில், சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால், 4 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.