Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?
எனக்கு தலைவர் பதவி கொடுங்க, அண்ணாமலை இருந்தா சரிவராது என டெல்லிக்கே நேரடியாக சென்று தமிழிசை காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் அதிமுகவை வைத்தே தலைவர் பதவியை பிடிப்பதற்காக தமிழிசை கணக்கு போட்டுள்ளதாக சொல்கின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு பாஜக தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதனால் மீண்டும் அண்ணாமலையே தலைவராவாரா இல்லை வேறு யாருக்கும் தலைவர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அண்ணாமலை தான் மீண்டும் தலைவராவார் என அவரது ஆதரவாளர்கள் சொல்லி வந்தாலும், பாஜக சீனியர்கள் அண்ணாமலை வரவே கூடாது என போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
அதுவும் தலைவர் பதவியை எப்படியாவது தனது வசமாக்கி விட வேண்டும் என தமிழிசை காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர். ஆளுநர் பதவியை விட்டுவிட்டு மீண்டும் பாஜகவில் முழு நேர அரசியலை தொடங்கிய தமிழிசை, எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என கணக்கு போட்டார். அதுவும் நடக்காமல் போனதால் தமிழக தலைவர் பதவியை வாங்கிவிட வேண்டும் என நினைப்பதாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை தமிழிசை நேரில் சென்று சந்தித்தன் பின்னணியிலும் இந்த காரணமே இருப்பதாக தெரிகிறது.
அண்ணாமலையை மீண்டும் தலைவராக்கினால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது, சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக கூட்டணி இருந்தால் தான் நம்மால் தொகுதிகளை கைப்பற்ற முடியும் என டெல்லி தலைமைக்கு தமிழிசை கொண்டு சென்றுள்ளாராம். என்னை தலைவராக்கினால் அதிமுக கூட்டணி சாத்தியமாகும் என சொல்லி டெல்லியில் தனக்கு இருக்கும் லாபிகளை வைத்து தமிழிசை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு பிறகே அதிமுக- பாஜக கூட்டணி இருந்திருந்தால் திமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருக்காது என சொல்லி அண்ணாமலை ஆதரவாளர்களின் விமர்சன வலையில் சிக்கினார் தமிழிசை. அதில் இருந்தே அண்ணாமலை மீது அவர் அதிக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் அண்ணாமலை வந்த பிறகு சீனியர்களை ஓரங்கட்டுவதாக தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடுப்பில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் சீனியர்களின் ஆதரவும் தனக்கு இருப்பதால் இதையெல்லாம் வைத்து அண்ணாமலையை பின்னுக்கு தள்ளி தலைவர் இருக்கையில் அமர தமிழிசை முடிவு செய்துவிட்டதாக சொல்கின்றனர்