Morning Headlines: வங்கக் கடலில் உருவான தீவிர புயல்.. டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம்.. இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- தீவிர புயலாக மாறிய ஹமூன் புயல்.. கரையை கடக்கும் தேஜ் புயல்.. மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..
அக்டோபர் 19 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த புயலுக்கு தேஜ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது இந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையை நோக்கி நகர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நிலவரப்படி ஏமன் (யேமன்) நாட்டின் அல் கைதாவின் தெற்கு - தென்கிழக்கில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் ஓமனின் சலாலாவின் மேற்கு- தென்மேற்கில் இருந்து 230 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..
- டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம்.. மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்..
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் குறைந்து வந்த நிலையில் நேற்று மதியம் மிக மோசமான நிலைக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலை அடுத்த சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி.. ஒரு பக்கத்துக்கு விளக்கம்..
பா.ஜ.க.-வில் இருந்து விலகுவதாக நடிகை கெளதமி அறிவித்துள்ளார். மிகுந்த வேதனையுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு X தளத்தில் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மிகுந்த வேதனையுடன் விலகுவதாக அறிவித்துள்ள கெளதமி, நில அபகரிப்பு வழக்கில் அவர் புகாரளித்துள்ள சி.அழகப்பன் என்பவருக்கு பா.ஜ.க. கட்சி ஆதரவு அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மகள் மற்றும் தன்னுடைய எதிர்காலத்திற்காக சட்டரீதியிலாக தொடர்ந்து போராடிவரும் கெளதமிக்கு பா.ஜ.க. தரப்பில் எந்தவித ஆதரவும் அளிக்கவில்லை என்பது வருத்தமாக இருப்பதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க..
- 17 வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. ஆப்ரேஷன் அஜய் மூலம் நாடு திரும்பிய 143 இந்தியர்கள்..
ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் 143 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் காசாவில் வான்வழி தாக்குதல் தொடங்கியது. ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். பார்க்கும் திசை எல்லாம் மனித உடல்கள். மேலும் படிக்க..
- நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம்.. 5 மாநில சட்டமன்றங்களின் விவரம் – யார் கைவசம் ஆட்சி? யாருக்கு சாதகம்?
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும் 5 மாநில தேர்தலில், யார் கைகள் ஓங்கியுள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். அடுத்த மாதம் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் படிக்க..