Ponmudi | ”பட்டாவ வாங்க மாட்டோம்” பெண்கள் வாக்குவாதம் கடுப்பான பொன்முடி | Villupuram | DMK
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்வில் பட்டா வாங்க மறுத்து பெண் ஒருவர் வாக்குவாதம் செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகர பகுதியான பவர் ஹவுஸ் சாலையின் ஓரத்தில் பட்டியலின சமூகத்தை சார்ந்த 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரயில்வே துறைக்கும் நகராட்சிக்கும் சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர். அங்கு வசித்து வருபவர்களை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து சாலையின் ஓரத்தில் வசிக்கும் 44 குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு திருப்பாச்சனூர் பகுதியில் இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மனை பட்டா வழங்கப்பட்டது. மக்கள் திருப்பாச்சனூருக்கு பதிலாக நகர பகுதியிலேயே மனை பட்டா வழங்கவேண்டுமென சொல்லி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
அதனை தொடர்ந்து கூட்ட அரங்கிற்கு வந்த அமைச்சர் பொன்முடியிடம் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே இடம் என்பதாலும் நீதிமன்ற உத்தரவு என்பதாலும் சாலையின் ஓரத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தான் வேண்டும் என்று அமைச்சர் விளக்கம் கொடுத்தார். திருப்பாச்சனூர் பகுதியில் மூன்று செண்ட் இடமாக வழங்கப்படும், வீடுகளை இடிக்க இரண்டு அல்லது மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும் என்றும் கலைஞர் வீடு கட்டி தரப்படுமென அமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து பட்டாக்களை பெற்று சென்றனர்.





















