Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷா
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக, அண்ணாமலையையே மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற டெல்லி தலைமை அதிரடி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில தலைவர் ரேஸில் நயினார் முந்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழ் நாட்டின் நலன் குறித்து பேசியதாக இபிஎஸ் சொன்னாலும் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைதான் என்பதை அரசியல் விமர்சகர்கள் உறுதிபடுத்தனார்கள். டெல்லி பாஜக தலைமைக்கு இபிஎஸ் ஒரு சில கண்டிஷன்கள் போட்டு இந்த கூட்டணியை உறுதி செய்ததாக தகவல்கள் வெளியானது. அதேபோல், அண்ணாமலை தொடர்பாகவும் இபிஎஸ் அமித்ஷாவிடம் பற்றவைத்தாகவும் கூறப்பட்டது.
இதனிடையே இபிஎஸ்- ஐ தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மறு நாளே அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அதிமுக உடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும், அதிமுக தலைவர்கள் பற்றி அதிகபிரசங்கி தனமாக பேசக்கூடது, எடப்பாடி சொல்வதை தான் கேட்க வேண்டும் என ஏகப்பட்ட கண்டிஷன்களை அமித்ஷா போட்டதாக கூறப்பட்டது.
அதே நேரம் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தனக்கு துளி கூட விருப்பம் இல்லை என்றும் நமது கட்சி தமிழ் நாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது நாம் முதன்மையன கட்சியாக மறுவோம் எனவும் அண்ணாமலை அமித்ஷாவிடம் தனது தரப்பை எடுத்து சொல்லியுள்ளார். இப்படி இதை மீறு அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போய்விடுகிறேன் என்றும் புலம்பியிருக்கிறார் அண்ணாமலை.
இச்சூழலில் தான் அதிமுகவும் கூட்டணி அமைக்க அண்ணாமலை முரண்டு பிடித்து வருவதால் அவரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க தீவிரம் காட்டி வருகிறதாம் டெல்லி பாஜக தலைமை. அண்ணாமலைக்கு அடுத்த ஆப்சனாக நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக நியமிக்கவும் பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு வந்தவர் நயினார் என்பதாலும் அதிமுக தலைவர்களுடன் நெருங்கி பழகக்கூடியவர் என்பதாலும் இந்த முடிவை பாஜக தலைமை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.





















