Morning Headlines: மாஸ் காட்டும் ஆதித்யா எல் - 1.. நீட் தேர்வால் அதிகரிக்கும் தற்கொலை.. இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு தாக்குதல் எதிரொலி.. ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதல் எதிரொலியாக ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு நேற்றை தினம் யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில் 5,000 ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேலில் போர் பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. அங்கு காஸா எல்லை பிரச்சினை நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனம் இடையே தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்திய அடுத்த சில மணி நேரத்தில் அந்நாட்டுக்குள் புகுந்தனர். மேலும் படிக்க..
- இந்தியாவில் குளிர்கால விடுமுறையை அனுபவிக்க மிகவும் இயற்கை அழகுமிக்க இடங்கல் எவை?
இந்தியாவில் குளிர்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலரும் தமது விடுமுறையை கழிக்க திட்டங்களை வகுத்து இருப்பார்கள். அந்த வகையில் குளிர்கால விடுமுறையை நாம் எந்தெந்த பகுதிகளுக்கு சென்றால் இனிமையாக அனுபவிக்கலாம் என பார்க்கலாம். இந்தியாவைப் பொறுத்தளவில் ஏராளமான பசுமை வளங்கள் மிக்க மலைப்பிரதேசங்கள் நிறைந்துள்ளன . அதேபோல் இயற்கையான கடற்கரை பகுதிகள், உப்பங்கழிகள் ,அழகிய வனப்பகுதிகள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் படிக்க..
- ஹெல்தி விண்வெளியில் மாஸ் காட்டும் ஆதித்யா எல் 1.. இஸ்ரோ சொன்ன சூப்பர் தகவல்..
ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த முக்கிய அப்டேட்டை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஆதித்யா எல்-1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. பூமியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும். மேலும் படிக்க..
- மூன்றே நாட்களில் 2 பேர் தற்கொலை.. மாணவர்களின் உயிரை பலி கேட்கும் நீட் தேர்வு – என்னதான் நடக்குது?
இளங்களை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெற்ற பிறகும், அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில், நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதில்லை மற்ற மாநிலங்களிலும் நடைபெறுகிறது. மேலும் படிக்க..