ரூ.40 லட்சத்துக்கு வீடு லீஸ் , அதே வீட்டை ரூ.2 கோடிக்கு ஏமாற்றி விற்ற அதிமுக பிரமுகர்.. போலீஸ் வலைவீச்சு
வீட்டை லீஸ்க்கு விட்டு , அதே வீட்டை வேறு நபருக்கு வீற்பனை செய்த அதிமுக பிரமுகரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ரூ. 2 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 44 ) அ.தி.மு.க., பிரமுகர். இவருக்கு மணலி காமராஜர் சாலையில் ராஜலட்சுமி என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஐந்து வீடுகளை மணலி சின்ன மாத்துரைச் சேர்ந்த கிரிதரன் ( வயது 41 ) அவரது சகோதரர் ரகுவரன் ( வயது 38 ) ஆகியோருக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து கடந்தாண்டு கிரையம் செய்து பத்திரம் வழங்கியுள்ளார்.
ரூ. 40 லட்சத்துக்கு லீஸ்
விற்பனை செய்த ஐந்து வீடுகளையும் , விற்பனைக்கு முன்பே தலா 8 லட்சம் ரூபாய் வீதம் , 40 லட்ச ரூபாய்க்கு , வேறு சிலருக்கு குத்தகை விடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து சகோதரர்கள் ரமேஷிடம் கேட்டுள்ளனர். 10 மாதங்களாகியும் ரமேஷ் வீடுகளை ஒப்படைக்காமல் சகோதரர்களை அவதுாறாக பேசி வந்துள்ளார். இதையடுத்து சகோதரர்கள் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஜூலை 28 - ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர். இவர் நில அபகரிப்பு முயற்சியில் கொடுங்கையூர் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.95 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டி கடத்தல்
கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து தனியார் பயணியர் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பயணியரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கருப்பு நிற பேப்பரால் மறைத்து வைக்கப்பட்ட தங்க கட்டி
சென்னையை சேர்ந்த 35 வயது ஆண் பயணி ஒரு வருடைய உடைமைகளை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த சூட்கேசில், கருப்பு நிற பேப்பரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட் டிருப்பது தெரிந்தது. அதன் எடை 1 கிலோ , மதிப்பு 93 லட்சம் ரூபாய். தேகாவில் இருந்து சென்னைக்கு தங்க கட்டிகளை சட்ட விரோதமாக கடத்த முயன்ற அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





















