மேலும் அறிய

மூன்றே நாட்களில் 2 பேர் தற்கொலை; மாணவர்களின் உயிரை பலி கேட்கும் நீட் தேர்வு - என்னதான் நடக்குது?

நீட் தேர்வுக்காக தயார் செய்து வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளங்களை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெற்ற பிறகும், அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில், நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கோட்டா:

இம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதில்லை மற்ற மாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில், கோட்டாவில் மேலும் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் ஒருவரான அவிஷ்கர் சுபாங்கி, நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். 

மாணவர்களின் உயிரை பலி கேட்கும் நீட் தேர்வுகள்:

இந்த நிலையில், நீட் தேர்வுக்காக தயார் செய்து வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக கூறப்படும் மாணவர் சிகார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

உத்யோக் காவல் நிலைய அதிகாரி சுரேந்திர டெக்ரா, இதுகுறித்து கூறுகையில், "பரத்பூர் மாவட்டத்தில் உள்ள நாட்பாய் நகரில் வசிக்கும் நிதின் பவுஜ்தார், நீட் தேர்வுக்குத் தயாராவதற்காக கடந்த ஜூன் மாதம் சிகாருக்கு வந்திருந்தார். பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து தயாராகி வந்த அவர் நேற்று வகுப்புக்கு செல்லவில்லை. அறை உள்ளே பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட ஃபவுஜ்தாரின் ரூம்மேட், ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, ​​அவர் அறையில் இருந்த மின்விசிறியில் சடலமாக தொங்கியுள்ளார்" என்றார்.

சிகார் நகரில் கடந்த மூன்றே நாள்களில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி, நீட் தேர்வுக்கு தயாராகி வரும் 16 வயது மாணவர் கவுஷல் மீனா, தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இந்தாண்டு மட்டும் 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள், கோட்டாவில் உள்ள பயற்சி மையங்களில் சேர்ந்து, நுழைவு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால், மன அழுத்தம் காரணமாகவும் தேர்வில் பயற்சி பெற முடியாத காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

கோட்டாவில் என்னதான் நடக்கிறது?

கொரோனா பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு தற்கொலைகள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பெருந்தொற்று காலத்தில், மிகக் குறைவான எண்ணக்கையிலேயே மாணவர்கள் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், 12 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

போட்டி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Woman Murder:  சிறுநீர் கழித்த பெண் வியாபாரி! வெட்டிக் கொன்ற ரவுடி! சென்னையில் பகீர்!Seeman NTK : சீமானுக்கு ஆப்புவைக்கும் ஆடியோ! உளவுத்துறைக்கு அதிரடி டாஸ்க்! சிக்கலில் நாம் தமிழர்Guindy doctor stabbed : அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து! HOSPITAL-ல் பகீர்! வட மாநிலத்தவர் கொடூரம்Hosur Fake Doctors : ’’10th படிச்ச நீ டாக்டரா?’’ டோஸ் விட்ட அதிகாரிகள்! வசமாய் சிக்கிய பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Breaking News LIVE 13 Nov : ஏர் இந்தியா - விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு என தகவல்
Breaking News LIVE 13 Nov : ஏர் இந்தியா - விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு என தகவல்
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
சிவ பக்தர்களே!
சிவ பக்தர்களே! "குழந்தை வரம் முதல் மன நிம்மதி வரை" ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இத்தனை நன்மையா?
Embed widget