மேலும் அறிய

TN Legislative Assembly: தொடங்கியது தமிழக சட்டப்பேரவை.. காவிரிக்காக தனித்தீர்மானம்! இன்றைய நிகழ்ச்சி நிரல் இதுதான்!

இன்று கூடிய தமிழ்நாடு மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார்.

தமிழ்நாடு மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முக்கியமாக காவிரி விவகாரம் குறித்து தீமானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. வழக்கமாக ஒரு கூட்டம் முடிந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் கூட வேண்டும். அதாவது ஏப்ரல் 21 ஆம் தேதி முடிவடைந்த கூட்டத்தை தொடர்ந்து அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் அப்பாவு, அக்டோபர் 9 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அதன்படி சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இன்று தொடங்கிய இந்த கூட்டத்தொடர் 5 நாட்களுக்கு  நடைபெறுகிறது.

முதல் நாள் என்பதால் இன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அதனை தொடர்ந்து சமீபத்தில் காலமான பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.  

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின் கேள்வி நேரம் தொடங்கும். இதில் இன்று முக்கியமாக 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான துணை மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல காலமாக தமிழ்நாடு மற்றும் கர்நாட்கா அரசு இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக காவிரியில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. ஆனால் காவிரி நதிநீர் பங்கிடு தற்போது அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் க்டசி கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியது என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் பரிந்துரை செய்தது. ஆனால் காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்படி மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவிரி தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Mayiladuthurai: ராகு - கேது பெயர்ச்சி; புகழ்பெற்ற கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்

“ஏன் நிலவுக்கு ராக்கெட் அனுப்புகிறோம்; பயன்தான் என்ன?” - இளைஞர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் விளக்கம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
With Love Review: ரஜினி சொன்னது உண்மையா? வித் லவ் படம் எப்படி இருக்கு? ஹீரோவாக ஜெயித்தாரா இயக்குனர் அபிஷன்?
With Love Review: ரஜினி சொன்னது உண்மையா? வித் லவ் படம் எப்படி இருக்கு? ஹீரோவாக ஜெயித்தாரா இயக்குனர் அபிஷன்?
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40 ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
TN Roundup: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? அட்டாக் மோடில் பாஜக, தவெக, தேமுதிக விருப்ப மனு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? அட்டாக் மோடில் பாஜக, தவெக, தேமுதிக விருப்ப மனு - தமிழகத்தில் இதுவரை
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
With Love Review: ரஜினி சொன்னது உண்மையா? வித் லவ் படம் எப்படி இருக்கு? ஹீரோவாக ஜெயித்தாரா இயக்குனர் அபிஷன்?
With Love Review: ரஜினி சொன்னது உண்மையா? வித் லவ் படம் எப்படி இருக்கு? ஹீரோவாக ஜெயித்தாரா இயக்குனர் அபிஷன்?
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40 ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
TN Roundup: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? அட்டாக் மோடில் பாஜக, தவெக, தேமுதிக விருப்ப மனு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? அட்டாக் மோடில் பாஜக, தவெக, தேமுதிக விருப்ப மனு - தமிழகத்தில் இதுவரை
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
TN Government employees: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்.? வெளியாகிறது புதிய அறிவிப்புகள்- தேதி குறித்த அரசு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்.? வெளியாகிறது புதிய அறிவிப்புகள்- தேதி குறித்த அரசு
Embed widget