Top 10 News Headlines: டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடு! - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today April 1: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம் எனவும், முதல்நிலை தேர்வு ஜுன் 15ன் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. வானகரம், செங்கல்பட்டு, பரனூர், திண்டிவணம், ஆத்தூர், சூரப்பட்டு உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.75 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு செல்ல புதிய கட்டுப்பாடு!
கொடைக்கானலில் இன்று முதல் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு. இபாஸ் நடைமுறையில் கெடுபிடி. ஜூன் 30 வரை வார நாட்களில் 4000, வாரயிறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ். கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் நடவடிக்கை.
அலட்சியத்தால் நேர்ந்த துயரம்
பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் இரு மினி லாரிகளை அலட்சியமாக நிறுத்தி ஓட்டுநர்கள் வாக்குவாதம். அவ்வழிய சென்ற பைக்குகள் அடுத்தடுத்து மோதவே, 7 இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. மினி லாரி ஓட்டுநர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்
ஐபிஎல்: செல்போன் திருடர்கள் கைது
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற CSK-RCB போட்டியின்போது ரசிகர்களின் செல்போன்களை திருடிய 8 பேரை கைது செய்த திருவல்லிக்கேணி போலீசார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 36 போன்கள் பறிமுதல்.
வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!
2024ல் கர்நாடகாவில் உள்ள SBI வங்கியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 17 கிலோ நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் கைது! பேக்கரி நடத்தி வரும் விஜயகுமார் என்பவருக்கு ரூ.15 லட்சம் கடன் தர மறுத்ததால் திட்டமிட்டு கொள்ளையடித்துள்னர். Money Heist போன்ற சீரிஸ் மற்றும் யூடியூப் பார்த்து பயிற்சி எடுத்துக்கொண்டதாக வாக்குமூலம். கிணற்றில் மறைத்து வைத்திருந்த நகைகள் அனைத்தும் மீட்பு.
'ஸ்பைடர் மேன்' படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்த சோனி
'ஸ்பைடர் மேன்' படத்தின் அடுத்த பாகமான Spider Man: Brand New Day அடுத்த ஆண்டு ஜூலை 31ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. மேலும் அனிமேஷன் படமான Beyond the Spider Verse படம் 2027 ஜூன் 4ம் தேதி வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனமான சோனி தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது. மியான்மரில் மட்டும் 2,065 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல். தாய்லாந்தில் 19 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் இன்றைய போட்டி
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டி ஏக்னா மைதானத்தில் நடைபெற உள்ளது. லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே மூன்று மற்றும் 5வது இடங்களில் உள்ளன.
”இந்தியாவிற்கு நன்றி” - ரொனால்டினோ
"எப்போதும் பாசத்துடன் அரவணைத்து வரவேற்கும் நாட்டிற்கு மீண்டும் சென்றது மிகவும் மகிழ்ச்சி. கால்பந்து போட்டிக்கு வந்து|உற்சாகமளித்த அனைவருக்கும் நன்றி” -ரொனால்டினோ, பிரேசில் வீரர். சென்னையில் நடைபெற்ற பிரேசில் லெஜண்ட்ஸ், இந்திய ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டி குறித்து X தளத்தில் பதிவு.

