மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
7 AM Headlines: நேற்றைய நிகழ்வுகள், இன்றைய சம்பவங்களின் தொகுப்பாக..! காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- அரசுப்பள்ளிகளில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் - வரவேற்புடன் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அமல்படுத்த கோரிக்கை
- போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட காவலர் மீது கடும் நடவடிக்கை - நாகை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
- தமிழ்நாட்டில் அடிமை அதிமுக-வையும், அதன் எஜமான் பாஜகவையும் ஒழிப்போம் - தஞ்சையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
- அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
- தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு மசோதா - ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்
- குறைந்தபட்ச நிலவழிகாட்டி மதிப்பு சென்னையில் சதுர அடிக்கு ரூ.1000 நிர்ணயம் - தமிழக அரசு உத்தரவு
- புதுக்கோட்டை மாவட்டத்தில் கல் குவாரிகள் செயல்பட தடை - 70 ஆயிரம் லாரி அளவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி
இந்தியா:
- நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக 8 மீட்டர் தூரம் பயணித்து பிரக்யான் ரோவர் ஆய்வு - அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாக இஸ்ரோ தகவல்
- சந்திரயான் 3 வெற்றியால் இந்தியாவின் திறமையை உலகுக்கே உணர்த்தியுள்ளோம் - கிரீஸ் நாட்டு வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடி பெருமிதம்
- ஏதென்ஸில் இருந்து நேரடிடியாக பெங்களூரு வந்தடைந்தார் பிரதமர் மோடி - இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களை இன்று சந்திக்கிறார்
- ஜி-20 மாநாடு எதிரொலி - உச்சநீதிமன்றத்திற்கு செப்டம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு
- மாநிலங்களவையில் இடையூறுகளை மட்டுமே பார்க்கிறேன் - துணைகுடியரசு தலைவர் ஜெக்தீப் தன்கர் வேதனை
- மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம் - சிபிஐ தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு
- பாஜக அரசின் வழிகாட்டுதலின் பேரில் லாலுவை சிபிஐ துன்புறுத்துகிறது - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு
- பஞ்சாபில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க நேரிடும் - முதலமைச்சருக்கு ஆளுநர் எச்சரிக்கை
- தெலங்கானாவில் தலைமைச் செயலக வளாகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் கட்டப்பட்டுள்ளன - ஆளுநர் தமிழிசை திறந்துவைத்தார்
உலகம்:
- இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் நேரில் பங்கேற்கமாட்டார் என தகவல்
- தேர்தல் முறைகேடு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு
- வாக்கன்ர் படைக்குழு தலைவரை நாங்கள் கொல்லவில்ல என ரஷ்யா விளக்கம்
- மடகாஸ்கரில் சோகம் - மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி
விளையாட்டு:
- உலக பேட்மிண்ட்ன் சாம்பியன்ஷிப் போட்டி - நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரனாய் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்
- ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு - வீரர், வீராங்கனைகள் என 634 பேர் பங்கேற்கின்றனர்
- யோ-யோ சோதனையில் பெற்ற புள்ளிகளை விதியை மீறி வெளியிட்ட விராட் கோலி - பிசிசிஐ எச்சரிக்கை
- ஐசிசி உலக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை நேற்று இரவு ஆன்லைனில் தொடங்கியது - இந்திய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை 30ம் தேதி தொடங்குகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தேர்தல் 2024
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion