மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய நிகழ்வுகள் இன்றைய செய்திகளாய் உங்களுக்காக! செம ஹாட்டாய் ஹெட்லைன்ஸ்...!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- இலங்கை நாட்டை சேர்ந்தவர்களால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் - வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்
- டிஎன்பிஎஸ்சி தலைவர் உறுப்பினர்களை நியமிக்கும் அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பினார் ஆளுநர் - விரைவில் பதில் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல்
- சென்னையை அடுத்த வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாக மோதல் விவகாரம் - 10 மாணவர்கள் அதிரடி கைது
- காலை உணவு திட்டம் நாளை மறுதினம் முதல் விரிவாக்கம்; அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக்கட்சிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
- மருமகள் கொடுத்த புகாரின்பேரில் மேட்டூர் பாமக எம்.எல்.ஏ மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
- சென்னையில் இன்று (ஆகஸ்ட் 23) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இம்மாதம் 30-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
- ஆளுநர் பதவியை துறந்துவிட்டு தேர்தலில் போட்டியிட வரட்டும் என்று உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் குறித்து பேசியதற்கு அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இந்தியா:
- அனைத்து செயல்பாடுகளும் சரியாக இருப்பதால் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கும் : இஸ்ரோ அதிகாரிகள் தகவல்
- காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு
- அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தால்தான் நான் போட்டியிடுவேன் என்று தெலங்கானா ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாசலப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு பரவி வருவதால் மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி பிரதமரின் முதன்மை செயலகம் எச்சரித்துள்ளது.
- பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தென்னாப்ரிக்கா புறப்பட்டு சென்றார்.
உலகம்:
- இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.
- தேர்தல் முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ட்ரம்ப் நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அதிபரின் தனிச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
- ஜி 20 மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 7-10 தேதிகளில் இந்தியா வருகிறார் ஜோ பைடன்.
- புகுஷிமா அணு உலையின் கழிவுநீர் நாளை கடலில் திறந்து விடப்படும் - ஜப்பான் பிரதமர் அறிவிப்பு
விளையாட்டு:
- அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி - ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி.
- 10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் சென்னையில் நாளை தொடங்குகிறது.
- செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கார்ல்சென் - பிரக்ஞானந்தா மோதிய முதல் சுற்று 'டிரா'
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion