Tamil Nadu Coronavirus LIVE : சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவெளி, முகக்கவசம்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
28 கோடி நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
நாட்டில் கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 30 லட்சத்து 39 ஆயிரத்து 996 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 கோடியே 36 ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது.
இ-பதிவு முறையை தவறாக பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமணத்திற்கான இ பதிவு முறையை தவறாக பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூன்றாவது வகை மாவட்டங்களில் தொடங்கியது பேருந்து சேவைகள்
தமிழ்நாட்டில் புதிய கொரோனா தடுப்பு விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மூன்றாவது வகை மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து சேவைகள் காலை முதல் இயங்கி வருகிறது. சென்னையில் காலை 6.30 மணி முதல் மெட்ரோ ரயில்களும் இயங்கி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

