மேலும் அறிய

Swiggy Share Story On Instagram: “அந்த பையன் மட்டும் இல்லன்னா...” - உயிரை காப்பாற்றிய ஸ்விகி ஊழியரை புகழ்ந்த முன்னாள் கர்னல்!

ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனமான ஸ்விகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான கதையை பதிவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி, ஓய்வு பெற்ற கர்னல் மோகன் மாலிக் உடல்நலக்குறைவால் கடுமையாக அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்த அவரது மகன் மும்பையில் உள்ள, லீலாவதி மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சென்ற வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல். இதனால் வழக்கத்தை விட பயணத்திற்கு அதிக நேரம் பிடித்தது.

இதனால், மாலிக்கின் மகன் அங்கு சென்ற இரு சக்கரவாகன ஓட்டுநர்களிடம், கார் வேகமாக செல்ல போக்குவரத்தை கொஞ்சம் எளிமைப்படுத்தி தருமாறு உதவி கோரியுள்ளார். ஆனால் எந்த வாகன ஓட்டியும் அவருக்கு உதவமுன்வரவில்லை.

ஒரு கட்டத்தில், ஸ்விகி ஊழியரான மிருணால் கிர்தாத் அவருக்கு உதவ முன்வந்தார். நிலைமையை பிறவாகன ஓட்டிகளிடம் எடுத்துச் சொல்லி, கார் வேகமாக போக போக்குவரத்தை எளிமைபடுத்திக் கொடுத்த அவர், விரைவாக மோகன் மாலிக்கை மருத்துவமனையிலும் கொண்டு சேர்த்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swiggy (@swiggyindia)

 

இது குறித்து ஓய்வு பெற்ற கர்னல் மோகன் மாலிக் கூறும் போது, “கடந்த வருடம் டிசம்பர் 25 ஆம் தேதி உடல்நலம் சரியில்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். என்னோட மகன் மும்பையில உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு என்னை கார்ல வேகமா கொண்டு போயிட்டு இருந்தான். ஆனா, கடுமையான போக்குவரத்து நெரிசலால எங்களோட கார் தடைப்பட்டு நின்னுட்டு இருந்திச்சு. 

உடனே என்னோட மகன் அங்க போன பைக் ஓட்டிகளிடம்  கார் வேகமா போறதுக்கு போக்குவரத்தை கிளியர் பண்ணி கொடுக்குமாறு உதவி கேட்டார். ஆனால் யாரும் நிக்கவில்லை. 

அப்ப அங்க வந்த சுவிக்கி ஊழியரான மிருணால் கிர்தாத் உடனடியான உதவ முன்வந்தாரு. காரின் முன்னாடி கத்திக்கிட்டே போயி வாகனங்களை வழிவிட செஞ்சாரு. அவரோட உதவியால ஒரு வழியா மருத்துவமனையை போய் சேர்ந்துட்டோம். மருத்துவமனைக்கு வந்த பின்னாடியும் மிருணால் கிர்தாத் அங்கிருந்த ஊழியர்கள்ட்ட என்னுடைய உடல்நிலை குறித்து சொல்லி வேகமாக எனக்கு சிகிச்சை கொடுக்கவும் உதவி செஞ்சாரு” என்று கூறியுள்ளார். 

 மேலும் பேசிய அவர், “ பல வார சிகிச்சைக்கு அப்புறமா இப்ப நான் நல்லா இருக்கேன். என்னோட வாழ்கையை அந்த சின்னப்பயன் மீட்டு கொடுத்துருக்கான். என்ன பொருத்தவரை அவர் ஒரு  “ மீட்பர்”. அவர் மட்டும் இல்ல அப்படின்னா என்னோட அன்புக்குறியவர்களுக்கு நான் திரும்ப கிடைச்சிருக்க மாட்டேன். அவருக்கும், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் என்னோட நன்றி.” என்றார்.

இந்தக் கதையை ஸ்விகி நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தானை மிரளவைத்த இஸ்ரேல் ஆயுதங்கள்.. பஞ்சாப்-க்கு இதுதான் எல்லைச்சாமி
பாகிஸ்தானுக்கு சீனா.. இந்தியாவுக்கு இஸ்ரேல்.. இது, என்ன புது கூட்டணியா இருக்கு?
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S 400 Missile: ”அவன் குறுக்க போயிடாதீங்க சார்” ரஷ்யா அனுப்பிவைத்த எமன்.. S-400 சாவுமணி அம்சங்கள்!Student Death: தோல்வி பயத்தில் தற்கொலை! +2 மாணவி விபரீத முடிவு! RESULT பார்த்து அதிர்ந்த பெற்றோர்கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhitaபதிலடியா? பீகார் தேர்தல் உத்தியா?”தீவிரவாதத்துக்கு பொறுப்பு மோடி?”நெருக்கும் எதிர்க்கட்சிகள் | india attack pakistan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தானை மிரளவைத்த இஸ்ரேல் ஆயுதங்கள்.. பஞ்சாப்-க்கு இதுதான் எல்லைச்சாமி
பாகிஸ்தானுக்கு சீனா.. இந்தியாவுக்கு இஸ்ரேல்.. இது, என்ன புது கூட்டணியா இருக்கு?
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
அத மட்டும் பண்ணாதீங்க..இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
அத மட்டும் பண்ணாதீங்க..இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
Pakistan MP Crying: இப்போ வருந்தி என்ன பண்றது.? தவறு செய்துவிட்டோம் என கதறி அழுத பாக். எம்.பி-யின் வீடியோ வைரல்...
இப்போ வருந்தி என்ன பண்றது.? தவறு செய்துவிட்டோம் என கதறி அழுத பாக். எம்.பி-யின் வீடியோ வைரல்...
TNEA 2025: பொறியியல் படிப்புகளுக்கு நடந்துவரும் முன்பதிவு; ஜூன் 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2025: பொறியியல் படிப்புகளுக்கு நடந்துவரும் முன்பதிவு; ஜூன் 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
IPL 2025: முடிஞ்சு போச்சு..! ஐபிஎல் போட்டி நிறுத்தி வைப்பு? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ..!
IPL 2025: முடிஞ்சு போச்சு..! ஐபிஎல் போட்டி நிறுத்தி வைப்பு? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ..!
Embed widget