SBI Hikes Lending Rates: எஸ்பிஐயில் கடன் வாங்குகிறீர்களா? இனி வட்டி அதிக வட்டிதான்! வெளியான அறிவிப்பு!
பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் உயர்த்த முடிவு செய்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்றவர்கள் அதிக தொகை கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்
வட்டி விகிதம் உயர்வு:
கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்.பி.ஐ வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக உயர்த்தியது. அதையடுத்து, எஸ்.பி.ஐ. வங்கியானது கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் வட்டி விகிதம் 7.10 சதவிகிதத்திலிருந்து 7.20 சதவிகிதமாக உயருகிறது. இந்த புதிய வட்டி விகிதமானது மே 15 முதல் அமலுக்கு வந்தது.
உயர்வின் தாக்கம்:
கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடன் செலுத்துபவர்களுக்கான EMI உயரும். இதனால் கடன் பெற்றவர்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த நடைமுறை ஏற்கனவே கடன் பெற்றவர்கள் மற்றும் கடன் பெற்றவர்கள் இருவருக்கும் பொருந்தும்.
பாதிக்கப்படுபவர்கள்:
எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், தனிநபர் கடன் பெற்றவர்கள், வாகன கடன் பெற்றவர்கள் உள்ளிட்டோர் அதிகம் தொகை செலுத்த வேண்டிய சூழல் உண்டாகிறது.
உயர்வுக்கு காரணம்:
ஆர்.பி.ஐ. வங்கியானது, வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டியான ரெப்போ வட்டி விகிதத்தை, கடந்த 2 ஆண்டுகளாக உயர்த்தவில்லை. இந்நிலையில் பொருளாதாரத்தில் பணவீக்கம் உயர்ந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆர்.பி.ஐ வங்கி உயர்த்தியது. அதையடுத்து எஸ்.பி.ஐ. வங்கியானது கடன்களுக்கான வட்டி விகிதத்தை 7.20 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
இதர வங்கிகள் உயர்த்தவும் வாய்ப்பு:
ஆர்.பி.ஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து , ஏற்கனவே சில வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்நிலையில் தற்போது எஸ்.பி.ஐ வங்கி கடன்களுக்கான் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் மேலும் சில வங்கிகள் உயர்த்தக்கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ALso Read:Gold, Silver Price : ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்